பக்கம் எண் :

147
 

புலனாகும். இத்தகைய பண்பாட்டினர் வாழ்கின்றமையால் தென்திசை உயர்ந்தது என ஓதப்பட்டது. சிவபெருமானை அகத்தியர் ஒப்பார் என்பது, சிவனை நினைவுறுத்தும் திருவைந்தெழுத்து திருவெண்ணீறு சிவமணி என்னும் மூன்றினையும் முறையே உயிர் உடல் உடை எனக் கொண்டு ஒழுகுவதாலும், அவனையே முழுமுதலாகக் கொண்டு வழிபடுவதாலும், அனைத்துயிர்கள் மாட்டும் அன்புபூண்டு ஒழுகுவதாலும் பெறப்படும். இஃது இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் நிற்ப தொருமுறை. ஐந்தெழுத் தேயுயிர்வெண் ணீறுடலாம் ஆர்ந்தவுடை, முந்து சிவமணியாம்முன்.

வடபுலம் இவற்றிற்கு முற்றும் நேர்மாறானது. அவர்கள் மேற்கொள்ளும் அருமறை பல கடவுள் உண்மை கூறுவது; சாதிமத வேறுபாடு சாதிப்பது. கொலைபுலை வேள்வியை நிலைநிறுத்துவது. செத்துப் பிறக்கும் தெய்வத்திற்கு முதன்மை கொடுப்பது. சிவனை மறப்பது. ஒரோ வழி மறப்பது. வேற்றுமை போற்றுவது. இவை போன்ற பல தீய ஒழுக்கங்களால் பண்பாடற்றது. பண்பாட்டில் தாழ்ந்ததனையே மக்கட்பழுவால் தாழ்ந்தது என்று மறைத்து ஓதப் பெற்றது. இதுவும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. தீப் பண்பினரே நிலம் பொறுக்கலாற்றாப் பழுவினராவர். இஃது 'அறனோக்கி ஆற்றங்கொல் வையம் புறனோக்கிப், புன்சொ லுரைப்பான் பொறை' என்னும் நாயனாரருளிய செந்தமிழ்ப் பொதுமறையான் உணர்க. அவ்வடபுலத்தாரை உயர்த்துதற் பொருட்டுச் செந்தமிழ்ப் பண்பாட்டினைக் கற்று ஒழுகி ஒழுகுவிக்கும் ஆற்றல் வாய்ந்த அகத்தியனாரைத் தென் திசைக்கு வரவிடுத்தனர். அவர் தென்பால். வந்து பண்பாட்டுடன் செந்தமிழைக் கற்றுத் திருவைந்தெழுத்தை ஓதிச் சிவவழிபாட்டை முற்றுறச் செய்து என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டு வாழ்ந்தனர். தென்தமிழ்ப் பண்பாட்டினை. வடபால் பரப்பத் தம்முடைக் கேண்மையராம் திருமூலர் பரஞ்சோதியார் முதலிய தமிழ்ச் சான்றோரை விடுத்தனர். அவர்கள் வந்து வடபால் பரப்பினர். அதனாலேயே தமிழாகமங்கள் வடவெழுத்தால் பொறிக்கப்பட்டன என்னும் உண்மை நடுநின்று உய்த்துணர்வார்க்கு நன்கு விளங்கும். மேலும் அத்தொடர்பால் வடபாலுள்ள தென்தமிழ்ச் சான்றோர் தென்பால் பொதியமலை வந்து மீள்வதும் செய்கின்றனர். பண் பாடனைத்தும் ஏட்டுப்படிப்பால் எய்துவதில்லை; வீட்டுப் பழக்கத்தாலேயே எய்துவதாகும். வீட்டுப் பழக்கத்தால் மேவும் பண்பாடதூஉம், ஏட்டுப் பழக்கத்தெய்தாது என நினைவு கொள்ளுங்கள் இதுகாறுங் கூறியவற்றை வரும் வெண்பாக்களால் நினைவு கூரத் தருகின்றாம்:

செந்தமிழின் மெய்யுணர்வு சேரா வடபுலத்தார்
தந்தமணப் பந்தர்க்கண் தாம்தாழ்ந்தார் - செந்தமிழைக்
கற்றுத் துலையொக்கக் கண்ணுதலோன் போக்குவித்தான்
தெற்ற அகத்தியனைத் தெற்கு.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் எனநவில்வார்-என்றும்
வடவர்பா லில்லை மறையில்லை நூலோர்
கடன்மாந்தர் வேந்தறிவர் இல்