இன்னும் ஒருவகையாக நோக்கின், முழுமுதல் சிவன் ஒருவனே. அவன் அம்மையப்பரென இரண்டாக விளங்குவன். அவன், அவள், அது என மூன்றினுள் நின்றனன். சீலம் நோன்பு செறிவு அறிவு என நான்குணர்த்தினன். இவற்றைச் சரியை கிரியை யோகம் ஞானம் எனக் கூறுவர். மூவர் தேவாரம், முனிமொழியும் திருவாசகம் திருக்கோவையார், திருமூலர் சொல்லென்னும் ஐந்தால் வெல்லுவித்தனன். ஓர் அறிவுமுதல் ஆறறிவு ஈறாகவுள்ள அனைத்துயிர்க்கும் அறிவிக்க ஆறாய் விரிந்தனன். எழுவகைப் பிறப்பிற்கும் அப்பால்நின்று பிறப்பினை நல்கி இயக்கும் பிறப்பில் பெருமான். பேறுபெற்ற ஆருயிர்கள்பால் சிவபெருமானின் எண்பெருங் குணங்களும் பதிந்து விளங்கும். அங்ஙனம் விளங்க அச்சிவபெருமான் அவ் வெட்டினையும் உணர்தல்வேண்டும். மூன்று என்பதற்கு அருவம், அருவுருவம், உருவம் எனக் கூறுதலும் ஒன்று. இத்திருமறை பொருளியல் புரைக்கும் பொற்பினது. (அ. சிதம்பரம்)ஒன்றவன்றானே - அவன் தானே ஒன்று; அவன் தனிப்பட நிற்கும்போது ஒன்று. இது கடவுள் ஒன்று எனக் கூறியது ஆகும். இரண்டவனின்னருள் - அவன் இன்னருள் இரண்டு; கடவுள் தன் அருளுடன் கூடி இருக்கும்போது இரண்டு எனப்படுவான். நின்றனன் மூன்றினுள் - கடவுள் முக் குணங்களோடு (இராசதம், தாமதம், சாத்துவீகம்) கூடியிருக்கும்போது, மூன்று என்று சொல்லப்படுவான். நான்கு உணர்ந்தான் - நான்கு வேதங்களையும் (இருக்கு, சாமம், தலவகாரம், பவுடிகம்) உணர்ந்து வெளிப் படுத்தினான். ஐந்து வென்றனன் - பொறி வாயில் ஐந்து அவித்தனன். ஆறு விரிந்தனன் - பதம், எழுத்து, மந்திரம், கலை, தத்துவம், புவனம் என்னும் ஆறு அத்துவாக்களாகப் பரந்துள்ளான். ஏழு உம்பர்ச் சென்றவன் - ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஏழு அண்டங்களையும் கடந்து நின்றவன். தான் எட்டு உணர்ந்து இருந்தான் - தான் எண் குணங்களையும் அறிந்து அவைகளுடன் உலகர் பொருட்டுச் சேர்ந்திருந்தான். (1) 2. போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங் கூற்றுதைத் தானையான்1கூறுகின் றேனே.2 (ப. இ.)மேற்றிசை - நாற்றிசையொடும். பொருந்தி அப்பெயரை முற்கொண்டு திகழும் கோணத்திசை நான்கு. அவை முறையே தென்கிழக்கு தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கென்பன. இதன்கண் சேர்தல் செறிதல் செலுத்தல் என்னும் உயிர்க்குயிராம் சிவபெருமானின் முப்பண்புகள் குறிப்பால் விளக்கப்பட்டுள்ளன. அவை புனிதன், நாதன், தென்பால் நிறுவிய வேந்தன் ஆளாம் கூற்றுதைத்தான் என்னும் கூற்றுக்களால் விளங்கும். ஒப்பில் முழுமுதலாம் சிவபெருமான் ஒருவனே அனைத்துயிரின் போற்றுதற்கும் உரியவன். அத்தகையோன் அருளால் ஆம் தூயவுடம்பினையுடையவன். அனைத்துலகினுக்கும் இன்னருள் புரியும் நடப்பாற்றலாகிய ஆதிசத்திக்குத் தலைவன். உயர்ந்த திசை என்று
1. நீற்றினை. அப்பர், 4. 49 - 2. 2. ஒழுகலரி. சம்பந்தர், 3. 67 - 12.
|