செய்யுமுதல்வன் சிவன். பெரியோரைச் சார்ந்தால் அவன் திருநெறி கூடலாம். தார் - மாலை. அடையா: செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; அடைத்து. (அ. சி.) போர்புகழான் - மதச்சண்டையிடாமல். வாயடையா - மவுனமாக. (4) 529. உடையான் அடியார் அடியா ருடன்போய்ப் படையா ரழன்மேனிப் பதிசென்று புக்கேன் கடையார நின்றவர் கண்டறி விப்ப உடையான் வருகென ஓலமென் றாரே.1 (ப. இ.) எல்லாம் உடையானாகிய நல்ல சிவபெருமானின் அடியார்கள் பண்டைப் பழவடியாருடன் கூடிப்புகுவர். அடியேனும், அவர்களுடன் முத்தலை வேற்படை நிறைந்தவனும், தழல் போலும் செம்மேனி உடையவனும் ஆகிய சிவபெருமானின் திருவெள்ளிமலைக்குப் போனேன். அங்குக் கடைகாவற் பெரிய தேவர் உடையானுக்கு அறிவிப்ப, அவன் அருள்தர உட்புக்கு அவர்கள் ஓலமென்றனர். ஆரழல் மேனி பதி - தீப்போலும் திருமேனியனாகிய சிவபெருமானது திருவெள்ளிமலை. கடை - கடைவாயில். ஓலம் - அடைக்கல மொழி. (5) 530. அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும் பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும் உரிமைவல் லோன்உணர்ந் தூழி யிருக்குந் திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. (ப. இ.) மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனாகிய அருமை வல்லோன் கலைஞானத்துள் தோன்றியருள்வன். அவனைத் தினைத்தனைப் பொழுதும் மறந்துய்யேனென்னுந் திண்ணிய நெஞ்சினராய் உள்ளார் பிறவிப் பெருஞ்சுழி நீந்துவர். சிவனடியாராம் உரிமை வல்லார் தம்மையும் தமையுடைய தன்னையும் உணர்வார். அருளால் ஊழிக்கு வாழ்வார். இத்தகைய வல்லார் (திருமை - சிவமை - திருத்தன்மை) சிவத்தன்மையுடையவராவர். அவருடன் சேரும் அருட்பேறு பெற்றனன். அருமைவல்லான் என்பதனை அடியாராகவே கொண்டு அவர் சித்தாந்தக் கலைஞானியாக இருப்பரென்றலும் ஒன்று. கலைஞானம் - திருமுறையுணர்வு. திருமை - திருவருள் தன்மை. தன்மையும் - தலைவனையும். கலைஞானத்துள் தோன்றுவோன் அருமைவல்லான். சிவஞானத்துள் தோன்றுவோன் பெருமைவல்லோன் இவன் பிறவிச்சுழியை நீந்துவோன் என ஓதியருளினர். இவ்வுண்மை வரும் சேச்கிழாரடிகள் திருமொழியான் உணரலாம் :
1. நின்ற. 12. வெள்ளானைச் சருக்கம், 45. " மன்றி " சேரமான், 135. " விடுமின். 8. எண்ணப்பதிகம், 5.
|