"சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்." - 12. சம்பந்தர், 70. இதன்கண் ஓதப்பெறும் உவமையிலாக் கலைஞானம்' புகழ் நூலாகிய திருமுறைகளும் பொருள் நூலாகிய மெய்கண்ட நூலிகளுமாகும். 'உணர்வரிய மெய்ஞ்ஞானம்' நண்ணுணர்வாகிய திருவடியுணர்வாகும். இதுவே 'உணர்வின் நேர்பெற வரும் சிவபோகம்' இதனை 'ஒழிவின்றியுருவின்கண், அணையும் ஐம்பொறி யளவினுமெளிவர வருளினை எனப் போற்றுதல்' நூலுணர்வாகிய 'உவமையிலாக் கலைஞான்' மாகும். நுண்ணுணர்வெனினும் தண்னுகர்வெனினும் ஒன்றே நுண்ணுணர்வு 'மாற்றம் மனம்கழிய நின்றமறை' அது சொல்லொணா நிலைமைத்து. எனினும், ஒருவகையாகத் 'திருச்சிற்றம்பலம்' என்னும் பெரும்பொருள் மறையால் ஓதியருளினர். இம்மறைக்கண் எழுத்து ஆறாகும். இம் மறையினை முதலும் முடிவும் ஓதும் மரபினால் பனனிரண்டெழுத்தாகும். இத்திருக்குறிப்புத் திருமுறை பன்னிரிண்டென்பதனைத் திருவருளான் உணர்த்தும் சிவக்குறிப்பாகும். (அ. சி.) திருமை - பெருமை. (6) இரண்டாம் தந்திரம் முற்றும்.
|