பக்கம் எண் :

243
 

2. இயமம்
(தீதகற்றல்)

535. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.1

(ப. இ.) தலைமைப்பாடுடைய திருவருட்டண்ணளிப் பவழக்குன்றனைய குளிர்சடையோன் சிவபெருமானாவன். அவன் ஆலமர் செல்வனாக வீற்றிருந்தருளித் திருவடியில் அழுந்திய நால்வர்க்குத் திருவருள் புரிந்தனன். எண்பெரும் திசையிலும் மேகங்கள் கடல்நீரை முகந்து பெய்யினும் அதற்குக் காரணம் முன்பு நீங்கள் செய்துபோந்த நியமங்களாகிய நன்றாற்றுதலேயாம். ஆதலால் மேலும் தொடர்ந்து நன்றாற்றுதலைப் புரியுங்கள் என்றருளினன். நல்லுழைப்பால் பெற்ற நல்லூதியம் தீதின்றி வந்த பொருளாகும். அப் பொருள் அறத்தையும் இன்பத்தையும் உறச் செய்யும். ஆனால் அவ்வறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வதற்கு நடைமுறையில் அப் பொருளை மேன்மேலும் ஈட்டுதல் வேண்டுமல்லவா? அஃது இதற்கு ஒப்பாகும். எழுந்து - (முகில்கள் கடல்நீரையுண்டு விண்ணில்) எழுந்து. தண் - அமைதி. அழுந்திய - திருவடியன்பில் உறுதியாய. நால்வர் : நன்னெறியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நிலை நான்கினையும் கைக்கொண்டோர்.

(அ. சி.) அழுந்திய நால்வர் - நந்திகள். நால்வர் - சனகர் - சனந்தவர் - சனாதனர் - சனற்குமாரர்.

(1)

536. கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையின்நின் றானே.

(ப. இ.) பதினொரு அருஞ்செயல்கள் இதன்கண் ஓதியருளப்பட்டன. இவற்றை விழுமிய உயிரினும் விழுமியதாய்க் கைக்கொண்டு ஒழுகும் தீதகற்றலாகிய இயமத்து நின்றோன் ஓதும் நன்னெறியாளன் ஆவன். உயிரை உடம்பினின்றும் பிரிப்பதே வெளிப்படத் தெரிந்த கொலையாகும். உண்மையான் நோக்குவார்க்கு ஓரறிவுமுதல் ஆறறிவு ஈறாகச் சொல்லப்படும் எவ்வகையுயிர்க்கும் சிறியதுன்பம் இழைப்பதும் கொலையேயாகும். துன்ப இழைப்புக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ துணைபுரிவதும் கொலையேயாம். அதனாலேயே திருவள்ளுவநாயனாரும் புலாலுண்டலும் கொலையே என்று அருளினர். பெருந் துன்பமும் கொலை என்னும் சொல்லால் ஆளப்படும் வழக்கு நோக்கின் அந்தோ உயிர் நீக்கும் கூற்றுச் செயற்கு மாற்றமும் இன்றுபோலும் வெகுளிப்பொருளாவரும் மெய்ப்பாட்டிற்குரிய பொருள்நிலைக்களம் நான்கு வருமாறு :

"உறுப்பறை குடிகோ ளலைகொலை யென்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே."

- தொல். பொருள்: 58.


1. கெடுப்பதூஉம் திருக்குறள். 15.