566. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப் பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல் பிரத்தியா காரப் பெருமைய தாமே. (ப. இ.) திருவருளால் துன்புறுத்தும் உபாதியாகிய மாயையை, அளவிடப்படாத ஒள்ளிய பேரொளியாக விளங்கும் சிவபெருமானை வேறுபிரித் துணரும் ஆருயிரை, மாயையினின்றும் பிரித்துச் சிவத்துடன் சேர்க்க நினைத்தல், சேருமாறு அகத்தவத்தால் கரைதல், உணர்வினுள் நோக்கல், ஆகிய அருஞ்செயல்கள் தொகைநிலையாகிய பிரத்தியாகாரம் என்ப. பிரத்தியாகாரம் - தொகைநிலை. (ஆவியை ஆண்டானை இயைபினைத் தொகுத்துக்காண்டல்.) கரைத்து - தெளிந்து. உன்னல் - நினைதல். கரைதல் - புணர்தல். உள்நோக்கல் - அழுந்தல். (அ. சி.) உபாதி - மாயையுடன் கூடிய உயிரை. ஒண்சோதி தன்னை - சிவத்தை. (8) 567. புறப்பட்ட வாயு புகவிடா வண்ணந் திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால் உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே. (ப. இ.) நான்குவிரல் அளவு உயிர்ப்பு விடுத்தல் முறையான் வெளிச்சென்றது கழிந்துபோகாவண்ணம் உறுதிப்பட மெய்ம்மையாக எடுத்தன்முறையான் உள்வந்து நின்றால் உள்ளமாகிய ஆருயிரும் அங்கே பொருந்தி நிலைபெற்று நின்றதாகும் பெருந்தகையோனாகிய சிவபெருமானும் நீங்கிப்போகான். உள்ளம் உறப்பட்டு நின்றதென்பதற்கு மனம் வயப்பட்டு நின்றதென்றலும் ஒன்று. திறப்பட்ட நிச்சயம் - கடைப்பிடித்த உறுதி. உறப்பட்டு நின்றது - வயப்பட்டிருந்தது. (அ. சி.) புறப்பட்ட வாயு - வெளிச்செல்லும் நால்விரல் அளவுள்ள வாயு. புகவிடா (போகவிடா) வண்ணம் - கழியாவண்ணம். (9)
7. தாரணை (பொறை நிலை) 568. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணாள் அடைக்கும் வழியது வாமே.1
1. வீழ்நாள். திருக்குறள், 38. " கேட்டாயோ 8. திருவம்மானை, 6.
|