பக்கம் எண் :

363
 

"தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு."

- உண்மை விளக்கம், 36.

(அ. சி.) தாண்டவமான தனி எழுத்து ஓர் எழுத்து - ஐந்தெழுத்து நடனம். தொழில் - அது தொழில்நடனம். ஆக்கல் - அளித்தல். அழித்தல் - மறைத்தல் - அருளல் தற்பரம் - தற்பரக்கூத்து. தமனியம் - பொன்.

(5)

869. தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்குந்
தானே அகார உகாரம தாய்நிற்குந்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந் தானே.

(ப. இ.) ஒப்பில்லாத பேரொளிப் பிழம்பும் தானேயாம். என்றும் அழிவின்றி ஒன்றுபோல் யாண்டும் செறிந்து நிற்கும் மெய்ப்பொருளும் தானேயாம். அகர உகரமாகிய அறிவோனும் உடையாளுமாக விளங்குவதும் தானேயாம். அருட்பெரும் கூத்துக்குத் தனிமுழுமுதலாய் விளங்குவதும் தானேயாம். தனக்கு நிலைக்களமாக இருப்பதும் தானேயாம். தராதலம் - நிலைக்களம்; தாங்கும் இடம்.

(அ. சி.) தத்துவம் - மெய்ப்பொருள். அகர உகாரமதாய் - அக்கர உருவமாய். தராதலம் - பூமி ஆதாரம் என்பது.

(6)

870. தராதல மூலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமவா சியவாந்
தராதலஞ் சொல்லிற் றான்வா சியவாகுந்
தராதல யோகந் தயாவாசி யாமே.

(ப. இ.) தாங்கும் ஆறு நிலைக்களங்களுள் மூலையாகிய மூலாதாரத்துக்கு நிலைக்களத் தெய்வம் மூத்தபிள்ளையாராகும். வெப்புத் தன்மையவாகிய தீமண்டிலத்துக்கு நிலைக்களத் தெய்வம் (அதி தெய்வம்) நகரமாகிய சலமகளாகும். சலமகள் - மறைப்பாற்றல். அம் முறை நமவாசிய என்னும் ஐந்தெழுத்தும் கூத்தப் பெருமான் வடிவமாகும். இவ் வடிவம்:

"சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரமது தான்."

- உண்மை விளக்கம், 34.

என ஓதும் தமிழாகம முறைப்படியாம். இத் திருப்பாட்டின்படி, ந, ம, வ, சி, ய என அமைத்தால் ஏறத்தாழக் கீழ்நோக்கிய முக்கோணமாகும். அது மட்டுமன்று, நம் நாவலந்தீவின் நல்லமைப்பையும் ஒக்கும். முக்கோணம் தீயின் அடையாளம். இந் நிலைக்குரிய தமிழ்மறை நமவசிய. இம் முறையாகக் கணிப்பார்க்கு எளிதாக உயிர்ப்படங்கும். அது சிறந்த பயிற்சியாகும். தராதலம் - உலகம். வாசி - உயிர்ப்பு. வாசி - சிறந்த பயிற்சி.

(7)