பக்கம் எண் :

362
 

(அ. சி.) ஓர் எழுத்து - ஓ என்னும் எழுத்து. ஈர் எழுத்து - அ + உ. இருவராய் - சீவன் + சிவன் or சத்தி + சிவன். மூவெழுத்து - அ + உ + ம். மா எழுத்து - ம் or மாயை.

(2)

866. தேவ ருறைகின்ற சிற்றம் பலம்என்றுந்
தேவ ருறைகின்ற சிதம்பர மென்றுந்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே.

(ப. இ.) தேவர்க்கும் மூவர்க்கும் மற்று யாவர்க்கும் பெருமானாகிய முழுமுதற் சிவன் என்றும் உறைகின்ற திருவிடம் சிற்றம்பலம் என்ப; இதனையே சிதம்பரம் எனவும் கூறுவர். இதனையே திருவம்பலம் எனவும் கூறுவர். இவை எல்லாம் அழகிய அம்பலம் என்னும் தென் பொதுவேயாம் (தென் - அழகு; திருவடி.)

(அ. சி.) தென் - அழகு, பெருமை.

(3)

867. ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண்ட வங்களே.1

(ப. இ.) எல்லையில் புகழ்சேர் தில்லைப் பொன்னம்பலத்தின்கண் என்றும் இடையறாது நிகழும் திருக்கூத்து ஐவகைக் குறிப்பாகும். தாண்டவம் என்பது ஆவிகளை முன்னேற்றப் புரியும் அருட்செயலாகும். அவை. அற்புதக்கூத்து, ஆனந்தக்கூத்து, அனவரதக்கூத்து, ஊழிக்கூத்து, பேரொடுக்கக் கூத்து என்பன. அற்புதம் - வியப்பு. ஆனந்தம் - பேரின்பம். அனவரதம் - இடைவிடாமை.

(அ. சி.) பொன்னம்பலம் - பொன்னம்பலத்தாண்டவம். அற்புதம் - அற்புதத் தாண்டவம். ஆனந்தம் - ஆனந்தத் தாண்டவம். அனவரதம் - அனவரதத் தாண்டவம். பிரளயம் அல்லது சங்காரம் - பிரளயத் தாண்டவம்; எனத் தாண்டவங்கள் 5

(4)

868. தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரந்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.

(ப. இ.) இத் திருக்கூத்துக்கள் ஒப்பில்லாத திருவைந்தெழுத்தின் அருள்கூத்து ஆகும். அவை அனைத்தும் ஆவிக்கு அருளும் அருளிப்பாடேயாகும். அக் கூத்தினை அருளுபவன், முழுமுதற் சிவபெருமானே. அது நிகழும் இடம் ஆருயிர்களின் நெஞ்சகம் - பொன்னம்பலம். இவ்வுண்மை 'உண்மை விளக்க'த் திருப்பாட்டான் உணரலாம். அது:


1. அழிப்பிளைப். சிவஞானசித்தியார், 1. 2 - 9.