றச் சிவகுருவாய் வெளிப்படுவன். வெளிப்பட்டுத் திருவைந் தெழுத்து ஓதியருள்வன். அங்ஙனம் ஆட்கொண்ட போதே ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் அற்றொழியும். இதுபோல் திருவைந்தெழுத்தும் நாட்டிலுள்ளார்க்கு ஏட்டிலுள்ளதேனும் ஆசான் கூட்டினாலல்லாமல் பயனெய்தாதென்க. ஏட்டிலுறும் ஐந்தெழுத்தும் எம்மான் அருட்குருசொற், கூட்டிலன்றிப் பேறின்றாம் கூறு. ஆரியன் : பேரறிவு நிறைந்தோன்; சிவன்; குரு மும்மலக் கட்டுடைய நம்மனோர்க்குச் சிவபெருமான் நம்முடன் போக்கும் வரவும் புணர்வுமிலாப் பின்னலாயிருப்பினும் அவன் கொள்ளும் குருஉருவின் வழியாகவே மலமகலும். அத்துவிதம். (5) 162. மலங்களைந் தாமென மாற்றி அருளித் தலங்களைந் தானற் சதாசிவ மான புலங்களைந் தானப் பொதுவினுள் நந்தி நலங்களைந் தானுள் நயந்தான் அறிந்தே. (ப. இ.) ஆணவம், கன்மம், மாயை, மாயாகாரியம், இவற்றை இயக் கும் நடப்பாற்றல் ஆகிய ஐந்தும் மலங்கள் என்று சொல்லப்படும். அருளோனாகிய சதாசிவன் சிவகுருவாய் எழுந்தருளிவந்து அவற்றை மாற்றியருளி, இவ்வுலக வாழ்வையும் சிவவுலக வாழ்வாகச் செய்தமைத்தனன். பொன்னம்பலத்து இன்பக் கூத்தினை இயற்றியருளும் நந்தியெங் கடவுள் ஆருயிரின் சிற்றறிவாகிய முனைப்புப் புலங்களை அகற்றினன். அதனால் இருள்சேர் இருவினையுள் விழையும் நல்வினையையும் நீக்கியருளினன். அதன்பின் ஆவியின் தூய்நிலை அறிந்தே நயந்து உள்ளெழுந்தருளினன். (6) 163. அறிவைம் புலனுட னேநான்ற தாகி நெறியறி யாதுற்ற நீராழம் போல அறிவறி வுள்ளே அழிந்தது போல குறியறி விப்பான் குருபர னாமே. (ப. இ.) ஆருயிரின் அறிவு ஐம்புலனுடன் கூடினதாகி எல்லை காண வொண்ணா ஆழத்தையுடைய நீர் நிலைகளில் இறங்கி ஏறும் துறையறியாது ஒருவர் செல்வதுபோலச் செல்லும். அச் சிற்றறிவு இயற்கைப்பேரறிவின் அடங்கியது போல் மயங்குவார்க்கும் மயக்ககற்றி நல்வழியை அறிவித்து நடத்துவிப்பான் சிவகுருவென்க. (அ. சி.) நான்றதாகி - கூடினதாகி. (7) 164. ஆமேவு பால்நீர் பிறிக்கின்ற அன்னம்1போல் தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தந் தீமேவு பல்கர ணங்களுள் உற்றன தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.2
1. கல்வி. நாலடியார், 135. 2. நாமல்ல சிவஞானபோதம், 10. 2 - 1.
|