159. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நிலாவே. (ப. இ.) தொன்மையிலுள்ள பதியாகிய இறையும், பசுவாகிய உயிரும், பாசமாகிய தளையும் என்று சொல்லப்படும் மூன்றினுள் இறையின் தொன்மையினை எல்லா நெறியினரும் சொல்லாலு.ம் பொருளாலும் ஐயந்திரிபின்றி மெய்க்காட்சியான் உடன்படுகின்றனர். அப் பதியினைப் போல் பசு பாசமும் தொன்மையே. பதியினைச் சென்று அணுகுந்தன்மையில்லாத உயிரியும் தளையும் பதி அருளால் எழுந்தருளிவரின் பசுத் தன்மையாகிய முனைப்பும் செயலும் மருளலும், இவற்றிற்கு முறையே வாயிலாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் பாசமும் முனைத்து நில்லாது ஒடுங்கும். பசுத் தன்மை - தளையினுட்பட்ட தன்மை. இதனைத் தளையி எனலாம். நிலா - முனைத்து நில்லா; அடங்கியிருக்கும். (3) 160. வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும் கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயா 1 என்னுந் தோயம தாய்எழுஞ் சூரிய2 னாமே. (ப. இ.) மூங்கிலினுள் ஒளியுடைத் தீ மறைந்து நிற்கின்றது. அதுபோல் ஆவியின் உடம்பகத்து உயிர்க்குயிராய்த் திருக்கோவில் கொண்டு விட்டுப் பிரியாக் குடியிருப்பாக உறைந்தருள்பவன் முழுமுதற்றலைவனாகிய நந்தியெம் பெருமான். அவன், பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுடையனாய் ஆருயிர்களின் மும்மை மலங்களையும் மாற்றியருள்வன். மேலும் தண்ணளியென்று சொல்லப்படும் தயாவுடையவன். அத் தயாவே திருவருள் வெள்ளமாய் எழும். அத் திருவருளையுடைய நந்தி சிவசூரியன் எனப்படுவன். சிவசூரியன்: அனைத்தொளிக்கும் ஒளியருளும் அறிவுப்பேரொளி. (4) 161. சூரிய காந்தமுஞ்3 சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. (ப. இ.) ஞாயிற்றின் கதிரை ஏற்றுப்புறத்தே விடும்கல் சூரிய காந்தக்கல் எனப்படும். அக்கல் சூரியன் முன்னன்றித் தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்சினைச் சுடமாட்டாது. அதற்குச் சுடும் ஆற்றலை நல்குவது ஞாயிறே. ஆயினும் அச் சூரியனும் இக்கல்லின் வாயிலாக அன்றிச் சுடான். அதுபோன்று சிவபெருமான் மும்மலத்தார் மலங்களை அகற்
1. குலங்கொடுத்துக். அப்பர், 6 : 20 - 6. 2. பரிதி. அப்பர், 5. 94 - 5. 3. சூரியகாந். சிவஞான சித்தியார், 8 - 2 - 28.
|