உ சிவமயம் பதினொன்றாந் திருமுறை திருவாலவாயுடையார் அருளிச் செய்த 1, திருமுகப் பாசுரம் நேரிசை யாசிரியப்பா திருச்சிற்றம்பலம் 1. | மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற(கு) அன்னம் பயில்பொழில் ஆல வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் | 5. | பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு)
ஒருமையின் உரிமையின் உதவி. ஒளிதிகழ், குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க; பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் | 10 | தன்போல் என்பால் அன்பன்; தன்பாற் காண்பது கருதிப் போந்தனன்; மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. |
திருச்சிற்றம்பலம்
1. இத்திருப்பாடல் தோன்றிய வரலாற்றைச் சேரமான் பெருமாள் நாயனார் புராணத்துட் காண்க. அருஞ்சொற் பொருள்: ஓலையைத் ‘திருமுகம்’ என்றல் அதனை விடுத்தோரது உயர்வு பற்றி. பாசுரம் - மிகுத்துரை பாட்டு. மதி - சந்திரன். மலிதல் - மகிழ்தல். முதனிலைத் தொழிற்பெயர். இது மகிழ்ந்து தவழ்தலாகிய தன் காரணம் தோற்றி நின்றது. இனி ‘மலிமதி’ என மொழிமாற்றி, ‘நிறைந்த திங்கள்’ என உரைப்பினும் ஆம்.
|