ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூன்று பாக்களும் விரவி வரத்தொடுப்பதாகும்.
11. பட்டினத்துப் பிள்ளையார் இவர் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருஒற்றியூர் ஒருபா ஒருபஃது என்னும் ஐந்து நூல்கள் அருளியுள்ளார். திருக்கழுமல மும்மணிக்கோவை முதற்பாடலில் திருஞான சம்பந்தருக்குத் திருமுலைப்பால் வழங்கியதையும் தோடுடைய செவியன் பாடியதையும் சுவைபட அறிவித்துள்ளார். இறைவன் அருளால் உயிர் பிறப்புறுவதையும், அப்பிறப்புக்களில் பிற உயிர்கள் தம்மைத் தின்றமையும், தாம் பிற உயிர்களைத் தின்றமையும் கூறுமுகத்தால் பலப்பல பிறவிகள் எடுத்தமையும் அவ்வப்பிறவி அனுபவமும் கூறியுள்ளார். அப்பாடற் பகுதி காண்க. பாவையுடன் இருந்த பரம யோகி யான்ஒன் றுணர்த்துவன் எந்தை மேல்நாள் அகில லோகமும் அனந்த யோனியும் நிகிலமும் தோன்ற நீ நினைந்த நாள்தொடங்கி எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித் தாயராகியும் தந்தையராகியும் வந்தி லாதவர் இல்லை, யான்அவர் தந்தைய ராகியும் தாயர் ஆகியும் வந்தி ராததும் இல்லை முந்து பிறவாநிலனும் இல்லை அவ்வயின் இறவாநிலனும் இல்லை பிறிதில் என்னைத் தின்னா உயிர்களும் இல்லை; யான் அவை தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை அவா என்பதே பிறப்பிற்கு வித்து என்பார் திருவள்ளுவர். அதனையே பட்டினத்தடிகளும் கூறி, அது நீங்க பூந்தராய் நாதனைப் போற்றுக. போற்றினால் அவா அகன்று பிறவி அறும் என்கிறார். பொருளாசை பெண்ணாசை பூ ஆசை என்னும் மருளாசை யாமாசை மாற்றித் - தெருள்ஞான
|