184. | காரணன் காமரம் பாடவோர் காமர்அம்(பு) ஊடுறத்தன் தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவர்யார்? போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன; பூஞ்சுணங்கார் ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே. | | 16 |
உடைமையால் மிகப் பருத்திருந்தும் சிறிய மானைக் கையில் ஏந்திய சிவபெருமானது கால்விரல்களில் ஒன்றின் ஊன்றலைத் தாங்க மாட்டாது அலறிய காரணம் என்ன? (அதனை எண்ணிப் பார்த்து,) அலை பொருந்திட நீர், ஞாயிறு, நிலம், திங்கள், வானம், காற்று, அழிவற்ற உயிர் ஆகிய எட்டினையும் தனது உடம்பாகக் கொண்ட, ஒளி வடிவாகிய அந்தப் பெருமானையே அவனது திருவடிகளைத் தலையிற் சுமந்தாயினும் சேருங்கள். குறிப்புரை: "தலையாற் சுமந்தும்" என்பதை, "தொக்குமினோ" என்பதற்கு முன்னே கூட்டுக. தடித்தல் - பருத்தல். "என்னே" என்னும் வினா, 'அது நன்கு தெரிந்த தன்றோ! என்னும் தேற்றக் குறிப்பினது. 'எத்தனைப் பேர் எத்தனைப் பெரிய உடலும் பேராற்றலும் படைத்திருப்பினும் அவர்களது ஆற்றல்கள் எல்லாம் எங்கும் நிறைந்த பெரும் பொருள் ஆகிய சிவபெருமானது ஆற்றலின்முன் எவ்வளவு' என்றற்கு அவன் அட்ட மூர்த்தியாய் நிற்றலை எடுத்தோதினார். அட்ட மூர்த்தங்கள் செய்யுளுக்கேற்ப வைக்கப்பட்டன. 'அவன் சிறியதொருமானை ஏந்துதலைக் கண்டு தவறாக உணர்ந்து விடாதீர்கள்' என்றற்கு, "கலையான்" என்றார். தொகுதல் - சேர்தல். "தொக்குமினோ" என்பதில் ககரமெய் விரித்தல். ஓகாரம், அசை. 184. பொழிப்புரை: எப்பொருட்கும் காரணனாகிய சிவபிரான் (வீணை யேந்தி) இசை பாடிக் கொண்டு வீதியிலே வர, குறும்பு செய்கின்ற ஒருவனாகிய மன்மதனது அம்பு மார்பில் தைத்து ஊடுருவுதலால் போர்க்குக் கொள்ளப் படுகின்ற வேல்போலும் கண்கள் 'நீராகிய துணியால் தம்மை மூடிக்கொண்டன. அழகோடு அணிகளைத் தாங்கி அழகு தேமலையுடைய கொங்கைகள் பொன்னாடையால் தம்மை மூடிக் கொண்டன. அவனது கொன்றை மாலையை வேட்ட வேட்கையே தனக்குத் துன்பமாக இவ்வாறு சோர்வடைகின்ற இம்மகளைத் தாங்குவார் யார்? குறிப்புரை: இது தில்லைப் பெருமானைக் காதலித்து வருந்தும் தலைவியது ஆற்றாமை நோக்கித் தோழி நெஞ்சழிந்து கூறியது. "காமர்" என்பது இழித்தற்கண் வந்த பன்மை."ஓர்" என்றதும் இழிவு பற்றி. தன் - சிவபிரானது. "தார்" என்றது அதனை வேட்ட வேட்கையை. அணங்கு - துன்பம். 'இத்தை யலை'ச் சுட்டியுரைக்க. "புனற்படம், பொற்படம்" என்பன உருவகங்கள். 'கண்கள் நிரம்ப நீரைச் சொரிந்தன; கொங்கை கள் பசலை போர்த்தன' என்பது பொருள்.
|