பக்கம் எண் :

101பொன்வண்ணத் தந்தாதி

182.உலகா ளுறுவீர்; தொழுமின், விண் ணாள்வீர் பணிமின்;நித்தம்
பலகா முறுவீர், நினைமின் பரமனொ டொன்றுலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின், நாள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே.

14


183.அலையார் புனலனல் ஞாயி(று) அவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கனென்னே?
கலையான் ஒருவிரல்தாங்ககில் லான்விட்ட காரணமே.

15



கண்டாய், முன்னிலையசை, மனம், மொழி, மெய் என்பவற்றால் சார்தல் பலவாகலின் பன்மை யாற் கூறினார். தான், அசை "சொன்னேன்" என்ற விதப்பு இக்கருத்துடையதாதலைக் "குற்றமில்லை என்மேல்; நான் கூறினேனே"1

182. பொழிப்புரை: மண்ணுலகத்தை ஆள விரும்புகின்றவர்களே, (நீவிர், உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானைக் கைகுவித்துக் கும்பிடுங்கள். விண்ணுலகை ஆள விரும்புகின்றவர்களே, (நீவிர், உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானது திருவடிகளில் வீழ்ந்து பணியுங்கள். நாள் தோறும் பற்பலவற்றை விரும்புகின்றவர்களே (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானை இடையறாது நினையுங்கள். இவைகளை யெல்லாம் விடுத்துச்) சிவபெருமா னோடு இரண்டறக் கலக்க விரும்புகின்றவர்களே, (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேற) அப்பெருமானை நந்த வனத்தில் உள்ள நல்ல பல மலர்களால் அருச்சனை செய்யுங்கள். என்றும் நரகத்தில் நிற்றலாகிய பொல்லாத விளைவை விரும்புகின்ற வர்களே, (அதற்கு நீவிர்) சிவபெருமானுடைய அடியாரை வருந்தப் பண்ணுங்கள்.

குறிப்புரை: 'சிவபெருமானை இந்த இந்த அளவில் வணங்குகின்றவர்கள் இன்ன இன்ன பயன்களை அடை வார்கள்' என்னும் வகை முறையையும், 'சிவாபராதம், சிவனடி யார்க்கு அபராதம் நரகம் விளைக்கும்' என்பதையும் இவ்வாறு கூறினார். நித்தம் - நாள்தோறும். கா - சோலை; நந்தவனம். 'நாளும்' என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. 'அல்ல' என்பது இடைக்குறைந்து நின்றது, நரகங்கள் பலவகையின ஆதல் பற்றி, 'அல்ல' எனப் பன்மையாற் கூறினார். அலைத்தல் - வருத்துதல்.

183. பொழிப்புரை: (உலகீர்,) கொடியை உயர்த்திய தேரை உடைய இராவணன் பத்துத் தலையும், இருபது தோளும்



1. திருமுறை - 6.31.5.