| முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்குமன்றிக் கிடங்கின்றி பட்ட கராவனை யார்பல கேவலரே. | | 64 |
| 233. | வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே கலந்தான் வலம்நீ(று) இடம்சாந்து எரிவலம் பந்திடமென்பு அலந்தார் வலமிடம் ஆடகம், வேல்வலம் ஆழியிடம் சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழலிடம் சங்கரற்கே. | | 65 |
போக்குவர். எங்ஙனம் எனின், உலகப் பொருள்களினின்றும் நீக்கிய தங்கள் ஆசையைச் செலுத்தாது, வேறு எவ்வெப்பொருளிலேயோ செலுத்துதலால், ஆகவே, அவர்கள் சிவனிடத்து அன்பு செய்யாது பிறவிடத்து அன்பு செய்தலால் அம்மைக்கும் உரியராகாது, இவ்வுலகப் பொருள்களைத் துறந்தமையால் இம்மைக்கும் உரியராகாது, அகழியுட் கிடக்கும் முதலைபோலத் துன்பத்திற் கிடத்தலல்லது, கரையேறாது தமியர் ஆகின்றனர். குறிப்புரை: 'இந்நிலை இரங்கத் தக்கது' என்பது குறிப்பெச்சம். "துறந்தவரே" என்பதை முதலில் வைத்து, "இலர்" என்பதன் 'ஆகலின்' அடங்கிய - உலகப் பொருள்மேல் செல்லாது அடங்கிய. அறுகாற் பறவை, வண்டு, அவை முடங்குதல் கொன்றை மலரிடத்து. எனவே, 'கொன்றையைச் சூடிய சடை' என்றபடி. "அன்றி" இரண்டில் முன்னது. 'மாறுபட்டு' என்றதாம். பின்னது, 'உரியராகாமல் எனப் பொருள் தந்தது. "இங்கும்" என்ற உம்மையால், 'அங்கும்' என்பது பெறப்பட்டது. 'அங்கு, இங்கு' என்பன, 'அம்மை, இம்மை' என்பவற்றைச் சுட்டின. கிடங்கு - அகழி. கரா - முதலை அது கரையேறாமைக்கு உவமை. 'கேவலர் தமியர்' என்பன ஒரு பொருளைக் குறிக்கும். தமியர் - துணையற்றவர். 'உலகப் பற்றை விட்ட போதிலும், மெய்யுணர்வு இல்லையேல் துறவு பயன் இலதாம்' என்றபடி. இதனைத் திருவள்ளுவரும், ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு.1 என அருளிச்செய்தார். இத்தன்மையோரையே அப்பர் பெருமானும் "இருபிறப்பும் வெறுவியர்"2 என்று அருளினார். 233.பொழிப்புரை: சிவபெருமானுக்கு வலப்பாதியும், இடப்பாதியும் மாறுபட்டதான வடிவம் உள்ளது. வலப்பாதி எங்ஙனம் எனின், வலப்பாதியில் காலில் வீரக்கழல், மார்பில் பாம்பு, சாம்பல், இறந்தவர் எலும்பால் ஆகிய மாலை, கையில் மழு, சூலம், தலையில் நீர் தங்கியுள்ள சடை - இவ்வாறு உள்ளது.
1. திருக்குறள் - 354. 2. திருமுறை - 6.3.5
|