| 72. | இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம் இவரை யிகழ்வதே கண்டீர்; - இவர்தமது பூக்கோல மேனிப் பொடிபூசி, என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர். | | 29 |
| 73. | பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே; பிறரறியும் பேருணர்வுந் தாமே; - பிறருடைய என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார் வன்பேயும் தாமும் மகிழ்ந்து. | | 30 |
| 74. | மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே |
விளங்குதற்பொருட்டு’ என்றவாறு. எனவே, ‘ஆன்றமைந் தடங்கிய அறிவர்க்கே இவர் செய்வன விளங்கும்’ என்பதாம். இவ்வாறு அம்மையார் கூறுவன எல்லாம் நம்மனோரை முன்னிட்டுக் கொண்டேயாம். 72. அ. சொ. பொ.: பொருள் - மெய்ப்பொருள். ‘பொருளாக’ என ஆக்கம் விரிக்க ‘இகழ்வதையே செய்வர்’ என ஒருசொல் வருவித்து முடிக்க, கண்டீர், முன்னிலை யசை. ‘இதுவே முறையாதலின், இவரது பேய்க் கோலத்தைக் கண்டு இகழ்பவர் எல்லாம், புறக்கோலத்தை மட்டுமே கண்டு, உண்மையை உணராத பிறரேயாவர்’ என்க. முற்பகுதி பொது முறைமையாயும், பிற்பகுதி சிறப்பு முறைமையாயும். பிற்பகுதி சிறப்பு முறைமையாயும் நின்றன. பூக்கோல மேனி - பொலிவு வாய்ந்த அழகிய மேனி. ‘மேனிமேல்’ என ஏழாவது விரிக்க. பொடி - சாம்பல். ‘பூக் கோல மேனிமேல் சாம்பலைப் பூசுகின்றார்’ என்பதாம். என்பு - எலும்பு. பேய்க் கோலம் பேய்போலும் கோலம், “கோலம் கண்டார்” என்பது, ‘கோலத்தை மட்டுமே கண்டவர்’ என்னும் பொருளது. “பிறர்” என்றது, ‘உண்மை யுணராதவர்’ என்றபடி கண்டார், எழுவாய்; பிறர், பயனிலை. 73. அ. சொ. பொ.: ‘பிறருடைய என்பே அணிந்து; இரவில் பேயும் தாமுமாய் மகிழ்ந்து தீயாடும் எம்மானார்’ என எடுத்துக் கொண்டு உரைக்க. பிறர், முன்னைப் பாட்டிற் கூறிய பிறர். பேருணர்வு - மெய்யுணர்வு என்றது, ‘அவர் மெய்யை உணர்ந்ததாக உணரும் உணர்வு’ என்றபடி. “தாமே” என்பன, ‘பிறர் ஒருவரும் இல்லை’ என்னும் பொருளவாய் நின்றன. 74. அ. சொ. பொ.: மடம் - அறியாமை. மடநெஞ்சே, யார் என்பேயேனும் இகழாதே அணிந்து உழல்வார்க்கு ஆட்பட்டமையால்’ என முதலில் எடுத்துக் கொண்டு, பின்பு
|