| கலையுடையான் வானின் மதியுடையான், காவாத் தலையுடையான் என்றுதொழு தாள். | | 43 |
700. | தாளார் கமல மலரோடு, தண்மலரும் தாள்ஆர வேசொரிந்து தாமிருந்து - தாளார் சிராமலையாய்! சேமத் துணையேஎன்(று) ஏத்தும் சிராமலையார் சேமத் துளார். | | 44 |
701. | ஆர்துணையா ஆங்கிருப்ப(து)? அம்பலவா! அஞ்சொலுமை ஆர்துணையா ஆனை உரிமூடின் - ஆர்துணையாம் பூவணத்தாய்! பூதப் படையாளி! பொங்கொளியாய்! பூவணத்தாய் என்னின், புகல். | | 45 |
அதன்மேல்உள்ள கலை, மேலாடை. மால் - மயக்கம். மையல், மலை ஆர் கலை - மலைகளில் வாழ்கின்ற மான். வானின், கலை, பிறை. ‘தலைகளைக் காவாக உடையான்’ என்க. கா - தோளில் சுமக்கப்படும் பொருள். இதுவே, ‘காவடி’ என வழங்குகின்றது. “கலையுடையான்” என்பன முதலியவற்றைச் சொல்லி அவனைத் தொழுதாள்; அதன் பயனா மால் ஆனாள்’ - என்க. இதுவும் தலைவியது ஆற்றாமை கண்டு தோழி அஞ்சி உரைத்தது. 700. குறிப்புரை: ஈற்றடியில் உள்ள சிராமலை - திருச்சிராப்பள்ளிக் குன்று. அதன் கண் உள்ள இறைவர் யாவர்க்கும் நன்மைதர இருக்கின்றார். சேமம் - நன்மை “தாள்” மூன்றில் முதலது தாமரைத் தண்டு; இடையது திருவடி. ஈற்றது, முயற்சி. சிர ஆம் அலையாய் - சிரசிலே நீரின் அலையைத் தாங்கியுற்றவனே சேமத் துணையே - எய்ப்பில் வைப்புப் போல உதவ இருப்பவனே. ‘தாளார்’ (வீடு அடைய முயல்பவர்) ஏத்தும் சிராமலையார்’ என்க. 701. குறிப்புரை: ‘அம்பலவா! ஆர்துணையாம் பூவணத்தாய்! பூதப் படையாளி! பொங்கொளியாய்! என்பன விளி. ஆர் துணையாம் - யாவர்க்கும் நிறைந்த துணையாகின்ற பூவணம், பாண்டி நாட்டுத் தலம், “அம் சொல் உமை ‘பூவணத் தாய்’ எனின் - பூப்போலும் தன்மையை தாய் என்ற ல். (நீ) யார் - யாரும் உம்மை தொகுத்தல். துணையா - நிகராகாதபடி. (யானையை உரிப்பார் வேறு ஒருவர் இல்லை.) ஆனை உரி மூடின் - யானைத் தோலை உரித்து மூடிக்கொண்டால். ஆங்கு ஆர் துணையா இருப்பது - அவள் (உமை) அப்பொழுது யாரைத் துணையாகப் பற்றி அஞ்சாமல் இருப்பது? சிவபிரான் யானையை உரித்த பொழுது உமை அஞ்சி அகன்றாள்’ என்பது புராண வரலாறு. புகல் - சொல்லு. ‘மூடி’ என்பது பாடம் அன்று.
|