அகவற்பா 825. | அறிவில் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும் கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும் இனையன பலசரக் கேற்றி, வினையெனும் தொல்மீ காமன் உய்ப்ப,அந்நிலைக் | 5 | கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் புலனெனும் கோள்மீன் அலமந்து தொடர, பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந்(து)அலைக்கும் துயர்த்திரை உவட்டின் பெயர்ப்பிடம்அயர்த்துக் குடும்பம் என்னும் நெடுங்கல்வீழ்த்து | 10 | நிறையெனும்கூம்பு முரிந்து, குறையா உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும் மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம் கலங்குபு கவிழா முன்னம்,அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ்சடிலத்துப் | 15 | பையரவணிந்த தெய்வ நாயக! தொல்லெயில் உடுத்த தில்லை காவல! வம்பலர் தும்பை அம்பல வாண!நின் அருளெனும் நலத்தார் பூட்டித் திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே. | | 16 |
சிலர், தில்லைக் கூத்தப் பெருமான் தொடர்பாக ஒன்றையேனும் சொல்கின்றிலர். மறி - மான்கன்று. தான்- தரித்தவன். புயன் - தோள்களையுடையவன். அவர் நரகிற்கு ஏதுவான செயல்களையே செய்து போவர் ஆதலின், ‘நரகுஉறுதலைத் தவிரமாட்டார்’ எனவும். ‘அதற்குக் காரணம்அறிவின்மையே’ எனவும் கூறினார். 825.குறிப்புரை: “அலங்கல்மதியுடன்.... அம்பலவாண” என்னும் தொடரை முதற்கண்வைத்து உரைக்க. இடும்பை - துன்பம். இணையன - இவைபோல்வன. எனவே, இங்குக் குறிக்கப்படுகின்ற மரக்கல வாணிபம் நஞ்சும். கள்ளும், கொலைக் கருவிகளும்போன்ற தீப்பொருள்வாணிப மாகின்றதேயன்றி, நற்பொருள் வாணிபமாகவில்லை. மீகாமன் - மாலுமி. உய்ப்ப - செலுத்த - கரு - உடம்பு தோன்றுதற்கு முதலாய் உள்ள வித்தும், நிலமும். அவைதாம் பலவாகலின்,பல துறைமுகப்பட்டினங்களாக உருவகம் செய்யப்பட்டன- ‘அந்தத்’ துறைகள் பலவற்றில் ஒருதுறைப் பிறப்பாகியகடலில் புகுந்து’ என்க. நீத்தம் - நீர். புலன் - ஐம்புல
|