பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை582

சந்த விருத்தம்

624.

நெறிதரு குழலை அறலென்பர்கள்;
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பார்கள்;

அறிகுவ தரிதிவ்விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்;
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர்; அமையும்; அவரென்செய?

மறிமழு வுடையகரனென்கிலர்;
மறலியை முனியும் அரனென்கிலர்;
மதிபொதி சடில தரனென்கிலர்;
மலைமகள் மருவு புயனென்கிலர்;

செறிபொழில் நிலவுதிலையென்கிலர்;
திருநடம் நவிலும் இறையென்கிலர்;
சிவகதி அருளும் அரசென்கிலர்;
சிலர்நா குறுவர் அறிவின்றியே.

15


அதனைத் திருத்தாமல் இருக்கின்றேன்’ என்றார். நறை - தேன். தாமம் - மாலை. சரண் - திருவடி. ‘உன்னைச் சார்வது’ என்க. சார்வது - அடைவது, என்கொடு- எதை வழியாகக் கொண்டு. என்றது, ‘எதுவும் வழியாதற்கில்லை’ என்றபடி. ‘கொண்டு’ என்பது, “கொடு” என மருவிற்றுசேமம் - நம்மை ‘ஒன்றும் செய்யாத எனக்கு உன் திருத்தில்லையை அடைவதாகிய ஒரு வழிதான் உள்ளது’ என்க. “நெறியே”என்னும் ஏகாரம் பிரிநிலை. அதன்பின் ‘உளது’ என்பது எஞ்சிநின்றது.

824. குறிப்புரை:பின் வருவன பலவற்றோடும் இயையுமாறு, “குழலை” என்பதில்‘ஐ சாரியை’ என வைத்து. ‘குழல் அறல்’ என்பர்கள்என அங்ஙனம் கூறுவார் கூற்றாக்கியே உரைக்க. குழல் -கூந்தல். அறல் - நீரோடையிற் காணப்படும் கருநுண்மணல். நெறி - நெறிப்பு, இங்கு உரைத்தது போலவே “நுதல்”முதலியன எழுவாயாகவும், மதியம் முதலியன பயனிலையாகவும் அமைந்து உரைப்பவர் கூற்றாகி வருதல் காண்க. நிழல்- ஒளி “மதி” என்றது பிறையை. ‘இனைய ஆன’ என ஆக்கம் வருவிக்க. ‘மடமங்கையர், அவர் கூறுமாறே அழகியராதல் அமையும்; ஆயினும், அவர் என் செய உளர்!’ என்க. ‘அவர்களால் ஆவது ஒனறில்லை; அதனால் அவர்களது அழகைச் சொல்லிக் கொண்டிருப்பதால் பயனில்லை’ என்பதாம். மடமங்கையரை மேற்கூறியவாறு பலபடப் புகழ்கின்ற