பக்கம் எண் :

581கோயில் நான்மணிமாலை

வெண்பா

822.

கிழவருமாய், நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்(து)
உழவரும்போய் ஓயுமா கண்டோம்; - மொழிதெரிய
வாயினால் இப்போதே, மன்றில் நடமாடும்
நாயனார் என்றுரைப்போம் நாம்.

13

கட்டளைக் கலித்துறை

823.

நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்;நறை மாமலர்சேர்
தாமத்தி னாலுன் சரண்பணி யேன்;சார்வ தென்கொடுநான்?
வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய்,
சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே.

14


பெரியவர்களும் சொல் கின்றார்கள்.“அணோரணீயாந்; மஹதோ மஹீயாந்” என்பது கடோபநிடதம்வான் - பெரிய. மாயா - கெடாத. மிடைந்தன -நெருங்கின; இது முற்றெச்சமாய் நின்றது. ஐவர் கள்வர்;ஐம்புல ஆசை. மண் மகன் - குயவன். திகிரி - சக்கரம்.தடுத்த - ‘அஞ்சற்க’ என அபயம் தந்தகை.

822.குறிப்புரை: ‘நெஞ்சே’ என்பதை முதற்கண் வருவித்து, “காமத்து உழவரும்” என்பதை அதன்பின்னும், “நாம்” என்பதை, “மொழிதெரிய”என்பதன்பின்னும் கூட்டி யுரைக்க. “கண்டோம்” என்பதன் பின்னும், ‘ஆதலால்’ என்பது வருவிக்க. உழவர் - முயல்பவர்.கிழவர் - முதியோர், நோய் மூப்பு, உம்மைத் தொகை.அதன்பின் நான்காவது விரிக்க. கீழ்ப் படுத்தலைக் கூறுகற் பொருட்டு “மூப்பு” என மீண்டும் அநுவதித்தார். மொழி தெரிய - நமது சொல் மற்றவர்களுக்கும்விளங்கும்படி. நாயனார் - தலைவர். “எப்பொழுதும்உரைப்போம்” என்றபடி. அவ்வாறு உரையாதோர் “வாளாமாய்ந்து மண்ணாகிக் கழிவர்”1 நாம் அவ்வாறின்றி ‘மன்றில் நடம் ஆடும் நாயனார்’ என்று எப்பொழுதும் சொல்லி யிருப்போமானால் இவ்வுடம்பு நீங்கியபின்அவன் திருவடியை அடைவோம் - என்பது கருத்து.

823.குறிப்புரை: மூன்றாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. “மான்” இரண்டில் முன்னதுமான் கன்று; பின்னது பெண். வாமம் - இடப் பக்கம் “வைத்தாய்”என்பது விளி, ‘உன்றன் நாமத்தினால்’ என்க. நாமம்- பெயர். அஃது அஞ்செழுத்து மந்திரம். அதனைப் பயில்கின்றநா குற்றத் தினின்றும் நீங்கும் ஆகலின், ‘அவ்வாறுசெய்து


1. திருமுறை - 5.90.3.