| கலவ மயில னார்சுருள் கரிய குழலினார்குயில் | | கருது மொழியி னார்கடை நெடியவிழியி னாரிதழ் | | இலவின் அழகி யாரிடை கொடியின்வடிவி னார்வடி | | வெழுதும் அருமை யாரென திதயமுழுதும் ஆள்வரே. |
அகவற்பா 833. | ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின் தாளின் ஏவல் தலையின் இயற்றி வழிவழி வந்த மரபினம் மொழிவதுன் ஐந்தெழுத்தவையெம் சிந்தையிற் கிடத்தி | 5 | நனவே போல நாடொறும் பழகிக் |
தலைவியது உருவத்தை அவளேபோலத் தோன்றும்படி நன்கு எழுதிய கிழியைக் கையில் கொண்டு ஊர்தல் வேண்டும். அதற்கு ‘இவளது அவயவங்கள் எழுதுதற்கு அரியனவாய் உள்ளனவே’ எனக் கவன்று கூறினான் எனவே, இதுவும் நேரே அகப்பாட்டாம். இங்கும் கூத்தப் பெருமான் பாட்டுடைத் தலைவர் மட்டுமே. சலதி - கடல். கடலில் தோன்றிய விடத்தை அதன்கண் வாழ்வதாகக் கூறினார். ஊழியின் இறுதி; சங்கார கால முடிவு. ‘அது பொழுது சிவபிரானைத் தவிரப் பிறர் ஒருவரும் இல்லை’ என்றதற்கு. “ஊழியின் இறுதி ஒருவர்” என்றார். ஆழிய - ஆழ்ந்த கரோடிகை - தலைஓடு. ‘புலால் கமழும் தலையோட்டை யுடையராயினும் தூயரே’ என்றற்கு, “புனிதர்” என்றார். பூசுரர், தில்லை வாழந்தணர். ‘புலிசைப் பொழில்’ என இயையும். “வாழ்வது” என்றது மயிலை. கலவம் - கலாபம்; தோகையை பொழிலிடத் தேகண்டான் ஆகலின், “பொழிலின் நிழலில் வாழ்வதுஓர் மயிலை ஒத்தவர்” என்றான். தனது நன்கு மதிக்கற்பாடு, தோன்ற, ஒருத்தியையே பலவிடத்தும் பன்மைச் சொல்லாற் கூறினான். ‘குயில் எனக் கருதும் மொழி’என்க. கடை நெடியவிழி என்றது குழை அளவும் செல்லும் விழி என்றவாறு. இலவு - இலவங் காய் இன், உவம உருபு. “அழகியார்”எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது. “வடிவினார்”என்பதும் அது. ‘ஆறு சென்ற வியர்’ என்பதில் பெயரெச்சம் காரணப் பொருட்டாய் நின்று காரியப் பெயர் கொண்டாற்போல, இங்கு, “எழுதும் அருமை” என்பதில் பெயரெச்சம் பண்பிப் பொருட்டாய் நின்று, பண்புப் பெயர் கொண்டது. 833. குறிப்புரை: இதனுள் “உளர்தரும்” என்பது முதல் “எட்டாய்” என்பது முடிய உள்ள பகுதிசிவபெருமானது அருமை கூறியது. ‘அத்துணை அரியனாகிய நீஎளியனாய்த் தில்லை அம்பலத்தில் ஆடுகின்றாய்’ என்றார். அதனால், “உளர்தரும்” என்பது
|