பக்கம் எண் :

589கோயில் நான்மணிமாலை

கட்டளைக் கலித்துறை

831.

பேதையெங் கேயினித் தேறியுய் வாள்!பிர மன்தனக்குத்
தாதை,தன் தாதையென் றேத்தும் பிரான்,தண் புலிசைப்பிரான்
கோதையந் தாமத்தண் கொன்றை கொடான்நின்று கொல்லவெண்ணி
ஊதையும், காரும் துளியொடும் கூடி உலாவி யவே.

22

விருத்தம்

832.

உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவுணாவென

நுகரும் ஒருவர் ஊழியின் இறுதியொருவர் ஆழிய

புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர்பூசுரர்

புலிசை யலர்செய் போதணிபொழிலின் நிழலின் வாழ்வதோர்


பேதையர் - மகளிர். இதனால், கூத்தப் பெருமானது. தேர் விழாவின் சிறப்புக் கூறியவாறு. பெற்றோரும், செவிலியரும் தடுத்தல், ‘சென்று காணின், அவனது காதல் வலையில் வீழ்ந்து, பிறிதொன்றற்கும் உழவார்’என்னும் அச்சத்தினாலேயாம். இதனால், ‘காந்தத்தை நோக்கிச் செல்லும் இரும்புபோலக் கடவுளை நோக்கிச் செல்வதே உயிர்கட்கு இயல்பு என்பதும், ‘அதனைச் செயற்கையாகிய பாசத் தளைகளே குறுக்கிட்டுத் தடுத்துத் துன்புறுத்துகின்றன’ என்பதும் ஆகிய உண்மைகள்புலப்படுத்தப் பட்டவாறு அறிக.

831. குறிப்புரை: “போதை எங்கேஇனித் தேறி உய்வாள்” என்பதை இறுதியில் வைத்து உரைக்க. பிரமன்றனக்குத் தாதை. திருமால். அவனால் ‘தனக்குத் தாதை’ என்று ஏத்தப்படும் பிரான் சிவபிரான். கோதை, தாமம் - ஒரு பொருட் சொற்கள். அவை தம்மில் சிறிது வேறுபாடுடைய. ஊதை - வாடைக் காற்று. கார் - மேகம்.“ஊதையும், காரும் துளியொடு கூடி உலாவிய” என்றது, ‘காலம்கார்காலமாயிற்று’ என்றவாறு. தலைவியரைப் பிரிந்து சென்ற தலைவர் கார்காலத்தில் வந்து கூடுவர் ஆகலின், ‘அவ்வாற்றால் களிப்பு எய்துகின்ற மகளிரைக் காணுந்தோறும் இவள் ஆற்றாமை மிகுவாள்’ என்பது பற்றி, “பேதை எங்கே இனித் தேறி உய்வாள்! என்றாள். இது கைக்கிளைத் தலைவிக்குத் தோழியாயினாள் பருவவரவு கண்டு கவன்றுரைத்தது.

832. குறிப்புரை: இது மடல் மாஊரத் துணிந்த தலைவன் அஃது இயலுமோ எண்ணிக் கவன்றுகூறியது மடல் மா ஊர்பவன்