வெண்பா 830. | பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள் சுற்றோட ஒடித் தொழாநிற்கும்; - ஒற்றைக்கைம் மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம் கோமறுகிற் பேதை குழாம். | | 21 |
போர்க்களத்து உலவுதல். பவ்வம் - கடல். எந்திரம் - மரக்கலம். கடாஅய் - செலுத்தி. குன்று -நீருள் நின்று மரக்கலத்தை உடைக்கும் மலைகள். சோற்றுக் கடன் - படைவீரர் தாம் போர் இல்லாது உண்டு இருக்கும் கடன். இது போர்வந்த காலத்தில் போர்க்களம் புகுந்து வஞ்சியாது பொருது வெல்லுதல். அல்லது உயிர் கொடுத்தலால் தீரும். தாள் உழந்து ஓடி - கால் கடுக்க ஓடித் தூது உரைத்தல். வாள் உழந்து - வாட்படை பயிற்றவித்து. அறியா.... தெருட்டி - கல்வி கற்பித்து புனைதல் - கவி யாத்தல். கற்றன கழறி - தான் அறிந்தவற்றைப் பலரும் அறிய அவைக்களத்து விரித்துரைத்து. பாச நெடுந்தொடர் (சங்கிலி) பூட்டி ஈர்ப்பவர் ஐவர் - ஐம்புலக் குறும்பர். ஆங்கு, உவம உருபுகள். அவை, ‘எல்லாம் வினைகளின்பயன்’ என்பது பற்றி வந்தன. கொப்புள் - நீர்க்குமிழி, ஒப்பின்மை, கணத்தில் தோன்றி கணத்தில் மறைதலில் பிற பொருள்கள்யாவும் ஒப்பிலவாதல் பற்றிவந்தது. உலப்பு இல் அளவில்லாத ‘எண்பத்து நான்கு நூறாயிரம்’ என்பது வகை, அல்லது சாதியாகலின் விரி அளவில்லனவாம். கலக்கம் - வேறுபாடு. “மயங்கியும்” என்னும் உம்மை இழிவு சிறப்பு ‘மயங்கினாலும், கண்ணிடைப் பொறித்தும், மனத்திடை அழுத்தியும், (வாக்கிடை) உரைக்க உறுதவம் (யான்) செய்தனன். தான் - இந்நிலைமை, நான்முகன்பதத்தினும் மேல் நிகழ் பதமாகும் (இந்தப்) பெறுதற்கரியதோர்பேறு பெற்றேற்கு உறுதற்கரியதும் உண்டோ’ எனமுடிக்க. “அரியதும்” என்னும் உம்மை உயர்வு சிறப்பு.“நெய் எரி.... வேதியா” - ‘கற்று ஆங்கு எரி ஒம்பிக் கலியைவாராமே செற்ற’1 தில்லைவா ழந்தணர். புலி - புலித்தோல்; ஆகுபெயர். யாத்து அசைத்த - கச்சாகஇறுக்கிக் கட்டிய. ஆயிரங் குடுமிப் பேராரம், ஆதிசேடனாகிய பாம்பு. உறுதவம் - மிக்க தவம். 830.குறிப்புரை: பெற்றோர் -நற்றாயர். பிழைத்து - அவர்களுக்குத் தப்பி. சுற்று - சுற்றிலும். ஒற்றைக்கை மா - தும்பிக்கையை உடைய விலங்கு; யானை. மறுக - வருந்த. மான் தேர் - குதிரைகள் பூட்டியதேர். விதப்பினால், ‘வேதமாகிய குதிரைகள்’ என்பது பெறப்பட்டது. கோ மறுகு - இராச வீதி. ‘பேதையர்’ எனபதை, “பேதைகள்” - என அஃறிணையாக உபசரித்தார்.
1. திருமுறை - 1.80.1.
|