பக்கம் எண் :

587கோயில் நான்மணிமாலை

அருளா வயவர் அம்பிடை நடந்தும்,
இருளுறு பவ்வத்(து) எந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்,
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்,

10

தாள்உழத்தோடியும் வாளுழந் துண்டும்,

அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்,
சொற்பல புனைந்தும்,கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப்பூட்டி
ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில்

15

பிறந்தாங்கிறந்தும், இறந்தாங்கு பிறந்தும்

கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பில் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்

20

தெய்வவேதியர் தில்லை மூதூர்

ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த
பாதப் போதும், பாய்புலிப் பட்டும்,
மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்,

25

சேயுயர்அகலத்(து) ஆயிரங் குடுமி

மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்,
அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்,
நெற்றியில்திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும்திங்கள் வேணியும்

30

கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தி,ஆங்(கு)

உள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்;
உறுதற் கரியதும் உண்டோ!
பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.

20


மேற்கொள்ளப்படும் பலவகையான தொழில்கள் இங்குக் குறிக்கப்பட்டன. உழந்து - உழுது. கார் - மழை.கிளை உடன் தவிர - சுற்றத்தார் பலரும் இல்லத்திலே இருந்துவிடத் தான் மட்டும். ‘பதி’ என வழங்கி, ‘எந்த ஊர் நல்ல ஊர்’ என ஆராய்ந்து சென்று. அருளாவயவர் - இரக்கம் காட்டாத படைவீரர். அம்பிடை நடத்தல்