“புதிதின் ‘ஆள்” என வந்து அடைந்திலம்”என்றது தம் முன்னோரையும் உளப்படுத்துத் தம் மரபு நிலை கூறியதேயாயிற்று. இதனால், அடிகள் வழி வழிச் சைவராதல் விளங்கும். இத்தகையோரையே ‘பழவடியார்’ என்பர்.தம் காலத்தில் சைவராகின்றவர். ‘புத்தடியார்’ஆவர். தம் பழமையை அடிகள் பின்னரும் தொடர்ந்து விளக்குதல் காண்க. தாளின் ஏவல் - காலால் ஏவிய பணி. ஏவல் ஏவப் பட்டதனைக் குறித்தலால் ஆகுபெயர். “சிந்தையிற் கிடத்தி” என்பதை, “மொழிவது”என்பதன்பின் கூட்டுக. ‘நாள்தோறும் பழகி நனவேபோலக் கனவிலும் நவிற்றும் காதலெம்’ எனக் கூட்டுக. துஞ்சலும் துஞ்சல் இலாதபோழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்1 என்று அருளிச் செய்தது இந்நிலையையேயாம் தொழிற் பெயர் எழுவாயாய் நிற்கும் பொழுது தொழில்முதல் நிலைகள் பயனிலையாய் வருதல் உண்டு. அதனை அம்முதனிலைப் பொருளவாய உருபுகளை ஏற்ற பெயர்களும் பயனிலைகளாய் வரும். அவ்வாற்றால் “நெஞ்சத்தை” என்பது போலஏனைய “அஞ்செழுத்தவை, கீர்த்தி, சாதனம், நிலை”என்பவற்றிலும் இரண்டாவது விரிக்க. கேட்டது. “மொழிவது, செய்திடுவது. காண்பது” என்பன தொழிற் பெயர்கள். நவிற்றுதலுக்கு ‘அவற்றை’ என்னும் செயப்படுபொருள் வருவித்து அதனை வேறு தொடராக்குக. ‘வரைந்து மீட்பது’என மேலே காட்டுக. அருத்தி - விருப்பம். சாதனம் - மணி. குயிற்றுவது - செய்வது. ‘பணியாதல் குறித்தே’ என ஆக்கம் வருவிக்க. சரண்வழி - திருவடிகளை அடையும் வழி. “காப்பின் ஒப்பின்”2 என்னும் சூத்திரத்துள் “செலவின்” என்பதும் கூறப்பட்டமையால் வழி என்பதும் இரண்டாவதன் தொகையாம். அல்லால் என்பதற்கு முன்னே இவை என்பதும் பின்னை ‘பிறிது’என்பதும் வருவித்து, ‘இவையல்லால் அடாது’ என்க. அடாது - வந்து பொருந்தாது. ஏகாரம் தேற்றம். ‘தம்கைத்தாக அகப்படுத்தற்கு’ என, ‘தம்’ என்பதும், ஆக்கமும் வருவிக்க. “வேடர்” என்பது, ‘வேடம் உடையவர், வேடர்’ என இரட்டுற் மொழிய நின்றது. கைத்து - கைப்பொருள். “சொல்லின் வலை, சமயப் படுகுழி”என்பன உருவகங்கள். இன், வேண்டாவழிச் சாரியை. படுகுழி, வீழ்ந்தழியும் குழி. அமைவயின் - வாய்ப்பு நேரும்பொழுது. “மானுட மாக்கள்” என்பதும் உருவகம்.“வலியப் புகுத்தும் விரதம்” என்றமையால் மேல்,“சமயம்” எனப்பட்டன சமணமும், மீமாஞ்சகமும் ஆயின. இவற்றுள் மீமாஞ்சக மதம். “கங்கை ஆடில்
1. திருமுறை - 3.22.1. 2. தொல் - சொல் - வேற்றுமையில்
|