பக்கம் எண் :

593கோயில் நான்மணிமாலை

வெண்பா

834.

நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரை
மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.

25

கட்டளைக் கலித்துறை

835.

மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்
அணிவாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப்
பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையைப்
பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணமென்னவே.


என்! காவிரி ஆடில் என்!”1 எனத் தொடங்கும் திருப்பதிகத்துள்ளும். “விரதமே பரமாக வேதியரும் சரத மாகவே சாத்திரங் காட்டினர்”2 எனத் திருவாசகத்துள்ளும்.

ஆதிமறை ஒதி, அதன்பயன்ஒன்றும் அறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே3

எனச் சாத்திரத்துள்ளும் விலக்கப்பட்டமை காண்க. வளைவுணர்வு - கோணலான அறிவு. ஓகாரம். எதிர்மறை.இதனுள் “நுரையும், திரையும்” என்பது முதலாகப் போந்தஅடிகளைச் சிவஞான போதத்து இரண்டாம் சூத்திர மாபாடியத்துள் பிரம முதற்காரண வாத மறுப்பில் எடுத்துக்காட்டி. இதன் உண்மைப் பொருளைத் தெளிவுபடுத்தியிருத்தல்காண்க. நொப்புறு கொட்பு - கலங்கலையுடைய சுழல். வரையில் சீகரம் - மலைபோன்ற அலைகள். வாரி. சங்கு முதலியன வருவாய் குரை - ஒலிக்கின்ற.

834. குறிப்புரை: ‘மாலும், அயனும் தேடிக் காணா ராயினும் மன்றுளே ஆடுகின்றான்’ என்றபடி.‘தம் பிரான்’ என்பது ‘தமக்குப் பிரான்’ என்னும்பொருளதாயினும் இங்குப் பொதுப்படத் ‘தலைவன்’ என்னும் அளவாய் நின்றது. ‘மணி, என்னை அளித்து அருளும் தலைவன்’ எனமுடிக்க. அளித்து - காத்து.

835. குறிப்புரை: முகிழ்ப்ப - முறுவல்சிறிதே அரும்ப புலன் வழிப் பேர் - ஐம்புல வழியினின்றும் நீங்கு. கடை வழி - இறுதிக்


1. திருமுறை - 5.
2. போற்றித் திருஅகவல் - 50, 51
3. நெஞ்சுவிடு தூது - கண்ணி - 116.