விருத்தம் 836. | என்நாம் இனிமட வரலாய் செய்குவ | | தினமாய் வண்டுகள் மலர்கிண்டித் | | தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள் | | அரனார் திருமுடி அணிதாமம் | | தன்னா லல்லது தீரா தென்னிடர் | | தகையா துயிர்கரு முகிலேறி | | மின்னா நின்றது துளிவா டையும்வர | | வீசா நின்றது பேசாயே. | | 27 |
அகவற்பா 837. | பேசு வாழி பேசு வாழி ஆசையொடு மயங்கி மாசுறு மனமே பேசு வாழி பேசு வாழி கண்டனமறையும் உண்டன மலமாம் | 5 | பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும் பிறந்தன இறக்கும் பெரியன சிறக்கும் ஒன்றொன் றொருவழி நில்லா வன்றியும் செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர | 10 | கல்வியிற்சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் |
காலத்தில் பிணம் என்ன - முன்புசொன்ன பெயராலே சுட்டாமல். பிணம் என்னும் பெயராலே சுட்டும்படி. சாதி - சாவாய். 836. குறிப்புரை: ‘மடவரலாய், கருமுகில் ஏறிமின்னா நின்றது; துனி வாடையும் வரவீசாநின்றது. அரனார் திருமுடி அணி தாமந்தன்னாலல்லது என் இடர் தீராது; உயிர் தகையாது; (அவரோ அதைத்தருவதாய் இல்லை) இனி நாம் என் செயகுவது பேசாய்’என இயைத்துக் கொள்க. இது. பருவம் கண்டு ஆற்றளாய கைக்கிளைத்தலைவி தூது விடக் கருதித் தோழியை நோக்கிக் கூறியது. “மடவரலாய்” என்றது தோழியை, தகையாது - தகைக்க (தடுக்க)ப்படாது.துனி வாடை - துன்பம் தருகின்ற வாடைக் காற்று. 837. குறிப்புரை: இதனுள் முதல் மூன்று அடிகள் இரட்டைத் தொடை. இடையே ஒருதொடர் மடுக்கப்பட்டமையால் அடுக்கு இசைநிறையாகாது பொருள் நிலையாய். வலிசெய்தற் பொருட்டாயிற்று.“வாழி” என்பன அசை. இவைகளை இறுதியிற் கூட்டியுரைக்க. நான்காவது முதல் ஏழு முடிய உள்ள அடிகளில்,
|