| நின்னது குற்றம் உளதோ நின்னினைந்(து) எண்ணருங் கோடி இடர்ப்பகை களைந்து கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு | | 30 | தேவர் ஆவின் கன்றெனத் திரியாப் பாவிகள் தமதே பாவம் யாதெனின் முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த அறுசுவை யடிசில் அட்டினி திருப்பப் புசியா தொருவன் பசியால் வருந்துதல் | | 35 | அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்(து) ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை தெண்ணீர்க் குற்றம் அன்றுகண் ணகன்று தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி | | 40 | வாலுகங் கிடந்த சோலை கிடப்பு வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப அடியெர்த் திடுவான் ஒருவன் நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே. | | 16 |
மால்விடைக்கு அடை. “கயிலை நடந்தனைய”இல்பொருள் உவமை. ‘நடந் தனையதாள்’ என்க. எனவே‘நடந்தாற் போலும் நடையை யுடையதாள்’ என்பதாம். தாள் - பாதம் நோன் - வலிய. உயர்நிலை - ஓங்கி நிற்கும் தாள்கோடு - கொம்பு. திமில் - முசுப்பு. சிமையம் - சிகரம்.“செங்கோடு” என்பதில் செம்மை ஆகுபெயராய்ப்பொன்னைக் குறித்தது. கோடு - சிகரம் மணி - மாணிக்கம். இமயச் செல்வன் பெற்ற அன்னம், உமாதேவி ‘கிள்ளைப்பிள்ளை, மயில் இளம்பேடை, மானின் கன்று, வல்லி’ என்பனவும் அப்பெருமாட்டியையே குறித்தன. “வல்லி” என்பது தவிர ஏனைய உருவகங்கள். “குயில் எனப் பேசும்” என்றாரேனும் பேசுமிடத்து எழும் குரலே அங்குக் கருதப்பட்டது. ‘மொழியாற் கிள்ளை, சாயலால் மயில், கண்ணால் மான்கன்று’ என்க. இடையே “குயில் எனப்பேசும்” என உவமை யணி வந்தது. வருமுலை - வளர்கின்றதனம். “தாங்கும்” என்பது மார்பிற்கு அடை. வல்லி - கொடி போன்றவர், உவம ஆகுபெயர். நீலம் - நீலப் பூகமலம் - தாமரைப் பூ. ‘நீலப் பூ தாமரைப் பூமேல் பூத்தது போலும்’ என்பது இல்பொருள் உவமை. அது முகத்தின்மேல்கண் விளங்குதலுக்கு உவமை, மதர் - களிப்பு. அரி - செவ்வரிகள்.ஐய - அழகிய. பணைக் கை - பருத்த
|