அகவற்பா | 877. | அன்றினர் புரங்கள் அழலிடை அவியக் குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள் | | 5 | பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில் பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக சிமையச் செங்கோட் டிமையச் செல்வன் மணியெனப் பெற்ற அணியியல் அன்னம் வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை | | 10 | குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை கதிரொளி நீலங் கமலத்து மலர்ந்தன்ன மதரரி நெடுங்கண் மானின் கன்று வருமுலை தாங்குந் திருமார்பு வல்லி வையம் ஏழும் பன்முறை ஈன்ற | | 15 | ஐய திருவயிற் றம்மைப் பிராட்டி மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி எமையா ளுடைய உமையாள் நங்கை கடவுட் கற்பின் மடவரல் கொழுந பவள மால்வரைப் பனைக்கைபோந் தனைய | | 20 | தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை பூவலர் குடுமிச் சேவலம் பதாகை மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல் அமரர்த் தாங்குங் குமரன் தாதை பொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும் | | 25 | மருதிடங் கொண்ட மருத வாண |
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை என்னும் திருக்குறள் இங்கு நினைவுகூரத் தக்கது. “தளர்பவரை” என்னும் இரண்டன் உருபை ஏழன் உருபாகத் திரிக்க. 877. குறிப்புரை: அன்றினர் - பகைத்தவர் நுண்பொடி, தோளுக்கு அடை, “கயிலை நடந்தனைய”என்பது முதலியன
|