பக்கம் எண் :

651திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

இவை அடைக்கப் பட்ட மெத்தை. ‘அணைமேல் விரித்து’ என இயையும். ‘மலர் போலக் கமழும்’ என்க. மடி - துணி.பட்டு - பட்டால் ஆகிய உறை. பதப் பஞ்சு - கொட்டிஎடுத்துப் பதம் ஆக்கிய பஞ்சு. நுண் பஞ்சு, இலவம் பஞ்சு‘பஞ்சின் கொட்டைகள்’ என்க. நெட்டணை - பஞ்ச சயனங்களைத் தாங்குகின்ற நீண்ட மெத்தை. கொட்டைகள்- தலையளைகள். பாயல் - படுக்கை. ‘இவ்வாறான பாயல்’என்க. ‘பாயல் மீமிசைத் தோய்ந்து’ என இயையும்.பரிபுரம் - காலில் அணிந்த சிலம்பு. அன்னத்தின் நடையைத்தாம் பயிற்றி என்க. பயிற்றுதல் - நிகழ்வித்தல், தோரணம், இடைக்கு உவமை, அம் - அழகிய. மெல் - மெல்லிய,குறங்கு - துடை. “ஓம்” என்பது மெல்லென ஒலிக்கும் ஒலிக் குறிப்பு. ‘குறங்கின்கண் ஒம் என்னும் கலிங்கம்’என்க. கலிங்கம் - உடை கவற்ற - ஏக்கறும்படி செய்ய. பண் வர இரங்கும் - பல பண்களும் தோன்ற ஒலிக்கின்ற.நடை வேறுபாட்டால் மேகலையின் ஒலி வேறுபடுவனவாம். மருங்கு - இடை; அரும் பெறல் நுசுப்பு - அரிதில் காணப் பெறும் இடை’ ‘அல்குலின் மேலதாகிய நுசுப்பு’ என்க. வனம் - அழகு. கதிர்ப்ப - அழகு விளங்க. ஆரம் - கழுத்துச் சரம், வளை, இங்குத் தோள் வளை. தோள் வரித்த சாந்து. தோள்களை அலங்கரித்த சந்தனம். உத்தரியம் - மேலாடைவள்ளை - வள்ளைத் தண்டு; நீரிற் கிடப்பது. இது காதிற்குஉவமையாகும். ‘வள்ளையை வாட்டிய’ என்க. வாட்டிய தோற்கச்செய்த. உருவக வகையால் பவளம் இதழையும், தரளம் (முத்து) பற்களையும், குமிழ் மூக்கினையும் குறித்தன. குமிழ் -குமிழம் பூ. நாட்டம் - கண். அவை காமத்தைமிகுவிக்கும் முகத்தால் ஆடவரது உயிரைப் போக்குவனபோறல் பற்றிக் காலனது (கூற்றுவனது) வேல் முதலிய மூன்றும் ஒருங்கமைந்தனவாகக் கூறப்பட்டன. மிளிர்தல் - சிவத்தல்.அம் சொல் - அழகிய சொல். ஆகம் - மார்பு. சின்னம்- ஓவியம். வறிது - சிறிது, அருந்தா - அருந்தி. சிறிதே அருந்துதல் பசியின்மையால். வாடினர் - வறியவர். வரையாது கொடுத்தல் - ‘இன்னார், இனியார்’ என்று வேற்றுமை பாராது எல்லார்க்கும் வழங்குதல். தூசு -நல்ஆடை. ‘அவற்றுள்ளும் நல்லன’ என்க. தொடை - மாலை. ‘தொடையின்கீழ்’ எனவும். ‘மைந்தரொடும், ஒக்கலோடும்’ எனவும் உருபுகள் விரிக்க. ஆர - நிரம்ப. ஆர்ந்து - நுகர்ந்து. ஒக்கல் - சுற்றம். “இவ்வகை யிருந்தேமாயினும்” என்றமையால், ‘இவ்வகையிருந்தேயாக வேண்டும்’ என்பது நியமம் ஆகாமை விளங்கும். அந்த முத்தி - மேல் தம்மைத் தாமே ஒறுப்பவர் விரும்பிய தாகக் கூறப்பட்ட முத்தி.இனி, ‘முத்திகளில் எல்லாம் முடிவான பரமுத்தி’ என்றலும் ஆம். “வாயிடை” என்பதன் பின், ‘வைத்தலை’ எனஒரு சொல் வருவிக்க. “வல்லான் ஒருவன்.... கல்லேபோல்” என்பதை “அந்த முத்தியும் இழந்திலம்”என்பதற்கு முன்னே கூட்டுக. அடி - 29 “யாங்கள் இவ்வகை யிருந்தேமாயினும் அந்த முத்தியும் இழந்திரம்” என்றதனால், ‘தம்மைத் தாமே ஒறுப்பவர் அவ்வாறு ஒறுப்பினும்