அந்த முத்தியைப் பெறுகிலர்’ என்பது பெறப்பட்டது. பல வகையிலும் உடலை வருந்தி நோற்றல் மன ஒருக்கத்தின் பொருட்டேயாம். அவ்வாற்றால் மனம் ஒருங்குதலின் பயன், மந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது சிந்தை சிவன்வழிச் செலுத்தலே யாகலின் தம்மைத் தாமே ஒறுத்தும் அது செய்யாதார் அந்த முத்தியை அடைவாரல்லர்’எனவும், ‘முன்னைப் புண்ணிய மிகுதியால் இம்மையில் மனம் ஒருங்கப் பெற்றோர் உடல் வருந்த நோலாதே, மாறாக, ஐந்த புலன்களும் ஆர ஆர்ந்தும் அந்த முத்தியையும் இழவாது பெறுவர்’ எனவும் ‘எவ்வாற்றானும் சிவனை நினைதலே முத்தி சாதனம்’ என்பதும், ‘எனவே, எதனைச் செய்யினும் அச்சா தனத்தைப் பெறாதார் முத்தியாகிய பயனைப் பெறுமாறு இல்லை’ என்பதும் உணர்த்தியவாறு, அப்பர், இக்கருத்தை, “கங்கை யாடில் என், காவிரி யாடில்என்”1 னெ்பது முதலாக எடுத்துக் கூறி, “எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே” என நியமித்த அருளிச் செய்தார்.அதனால் அவர் அங்குக் கங்கை ஆடுதல் முதலியவற்றையும், இங்கு இவ்வாசிரியர், “மக்களை, மனைவியை, ஒக்கலை ஒரீஇக் காடும், மலையும் புகுந்து கடுந்தவம் புரிதலையும் இகழ்ந்தார் என்னற்க. மற்று, எவ்வாற்றானும் சிவனை நினைத்தலே சாதனம் ஆதலையே வயிறுத்தினர் என்க. அவைதிகருள் சமணரும் வைதிகருள் மீமாஞ்சகரும் இங்குக் கூறியவாறு, ‘தம்மைக் தாம்ஒறுப்பதே முத்தி சாதனம்’ என்பர். அது பற்றியே இங்குவைதிகர் புரியம் தவங்களாக் கூறிவந்தன பலவற்றுக்கு இடையே அடி - 20, 21 தலையைப் பறித்தல், உடையைத் துறத்தல், உண்ணாது உழலல், கல்லில் கண் படைகொள்ளல் ஆகிய சமணர் தவங்களையும் கூறினார். கல் ஒன்றை வல்லான் ஒருவன் கைம் முயன்று எறிதல், மக்களை, மனைவியை, ஒக்கலை ஒருவுதல் முதலியவற்றைச் செய்வோர் ஐந்தெழுத்தை ஓதுதற்கும், மாட்டா ஒருவன் வாளா எறிதல், அவற்றைச் செய்ய மட்டாது ஐம்புலன்களை ஆர நுகர்வார் ஐந்தெழுத்தை ஓதுதற்கும் உவமைகள். ‘கல்லின் இயல்பு, யாவர் உயர எறியினும் தப்பாது நிலத்தில் வீழ்தல் ஆதல்போல, ஐந்தெழுத்தின் இயல்பு, யாவர் ஓதினும் முத்தியிற் சேர்த்தல்’ என்பது இவ்வுமைகளால் விளக்கப் பட்டது. இதனை, சினத்தைப் பொருளென்று கொண்டவன்கேடு நிலத்தறைந்தாள் கைபிழையா தற்று என்னும் குறளிற் போந்த உவமையோடு வைத்துக்காண்க. அடி - 77: அத்திறம் -ஐம்புலன்களையும் ஆர நுகர்ந்தும் அந்த முத்தியையுமயாம் இழவாது பெறுதலாகிய கூறுபாடு. என் எனின்
1. திருமுறை - 5.99.
|