வெண்பா 881. | நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து சுமம் நவிற்றிக் கழந்தொழியல் - ஆமோ பொருதவனத் தானையுரி போர்த்தருளும் எங்கள் மருதவனத் தானை வனைந்து. | | 20 |
- எங்ஙனம் எனின், ‘நின் நாமம் நவின்றோர் நலத்தின் வழார் ஆகலின்’ என முடிக்க. ‘ஆகலின்’என்பது சொல்லெச்சம் எனவே, “வழார்” என்றது, ‘வழாதவாறு’நீ அருளுகின்றாய்’ என்றதாம். ‘சிவனை நினையாது பிறவற்றையெல்லாம் செய்வோர் அச்செயல்களுக்கு உரிய பயன்களைப் பெறுதலோடு ஒழிவதல்லது, பிறவி நீங்குதலாகிய முத்தியைப் பெறார்’என்பது கருத்து. இதனை, பரசிவன் உணர்ச்சி யின்றிப் | பல்லுயிர்த் தொகையும் என்றும் | விரவிய துயர்க் கீ றெய்தி | வீடுபே றடைது மென்றல் | உருவமில் விசும்பின் தோலை | உரித்துடுப் பதற்கொப்பென்றே | பெருமறை பேசிற் றென்னில் | பின்னும்ஓர் சான்றும் உண்டோ |
எனக் கந்த புராணத்திலும்1 மானுடன் விசும்பைத தோல்போற் | சுருட்டுதல் வல்ல னாயின் | ஈனமில் சிவனைக் காணாது | இடும்பைதீர் வீடும் எய்தும்; | மானமார் கருதி கூறும் | வழக்கிவை ஆத லாலே | ஆனமர் இறையைக் காணும் | உபாயமே யறிதல் வேண்டும் |
எனக் காஞ்சிப் புராணத்திலும்2 கூறப்பட்ட உபநிடதப் பொருள் பற்றி யறிக. 881. குறிப்புரை: “நாமம்நவிற்றாய்” என்பதற்கு முன் ‘அவன்’ என்பது வருவித்து, அத்தொடரை இறுதிக்கண் கூட்டுக. நவிற்றாய் - சொல்லு. “காமம்” என்பது அதன்வழி நிகழ்வதாகிய. கலவியைக் குறித்தது. “தோய்ந்து நவிற்றி” என்பது,‘ஓடி வந்து’ என்பதுபோல
1. தட்ச காண்டம் - உபதேசப்படலம் - 25. 2. சனற்குமாரப் படலம் - 43.
|