கட்டளைக் கலித்துறை 882. | வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதன னம்புக்(கு) இளையார் தனங்கண் டிரங்கிநில் லாரிப் பிறப்பினில்வந்(து) அளையார் நரகினுக் கென்கட வார்பொன் னலர்ந்தகொன்றைத் தளையார் இடைமரு தன்னடி யார்அடி சார்ந்தவரே. | | 21 |
அகவற்பா 883. | அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம் நிறையக் கொடுப்பினுங் குறையாச் செல்வம் மூலமும் நடுவும் முடிவும் இகந்து காலம் மூன்றையுங் கடந்த கடவுள் | 5 | உளக்கணுக் கல்லா ஊன்கணுக் கொளித்துத்(து) துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர் எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது உறுப்பில் நின்றெழுதரும் உள்ளத் தோசை வைத்த நாவின் வழிமறுத் தகத்தே | 10 | தித்தித் தூறம் தெய்வத் தேறல் |
செய்யும் செயலை வகுத்துக் கூறியதாம். பொருத - போர் செய்த. வனத்து ஆனை - காட்டு யானை. வளைந்து - வலம் வந்து. 882. குறிப்புரை: “பொன் அலர்ந்த” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. பொன் அலர்ந்த - பொன்போல மலர்ந்த. தளை - தளைக்கப்பட்டது; மாலை, வளைதல் - வலிமை யிழத்தல். ‘பசியின் வளையார்; பிணியின் வருந்தார்’ என மாற்றிக் கொள்க. தனம்- மகளிர் கொங்கை. இரங்குதல் - ஆற்றாது வருந்தல்,“பொழுதுகண்டிரங்கல்”1 என்றது காண்க. அளைதல் - உலகியலில் ஈடுபடுதல். என் கடவார் - என்ன கடமை யுடையாராவார்!‘ யாதொரு கடமையும் உடையவர் ஆகார்’ என்பதாம். 883. குறிப்புரை: ‘செல்வம், சுடர், ஓசை, தேறல், நாற்றம், முளை’ - என்பன உருவகவகையால் திருவிடைமருதூர் இறைவனையே குறித்தனவாய், விளியேற்று நின்றன. “கொடுப்பினும் குறையாச் செல்வம், (திருவருள்) ஊன் கண்ணுக்கு ஒளித்து, உளக்கண்ணுக்கு விளங்கித் துளக்கற நிமிர்ந்த சுடர். இருசெவிக்கு எட்டாது
1. திருக்குறள்
|