| துண்டத் துளையில் பண்டைவழி யன்றி அறிவில் நாறும் நறிய நாற்றம் ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும் தானே ஆகி நின்ற தத்துவ |
15 | தோற்றுவ எல்லாம் தன்னிடைத் தோற்றித் தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும் இருள்விரி கண்டத்(து) ஏக நாயக கருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர |
20 | மருதிடம் கொண்ட மருதமா ணிக்க உமையாள் கொழுந ஒருமூன் றாகிய இமையா நாட்டத் தென்தனி நாயக அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு |
25 | நெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக் கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில் குடரெனும் சங்கிலி பூண்டு தொடர்ப்பட்டுக் கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத் தழுந்தி உடனே வருந்தி நெடுநாட் கிடந்து |
30 | பல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்துந் தண்ட லாளர் மிண்டிவந்த தலைப்ப உதர நெருப்பில் பதைபதை பதைத்தும் வாதமத் திகையின் மோதமொத் துண்டும் கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லா(து) |
35 | இடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் பாவப் பகுதியில் இட்டுக் காவல் கொடியோர் ஐவரை ஏவி நெடிய ஆசைத் தளையில் என்னையும் உடலையும் பாசப் படுத்திப் பையென விட்டபின் |
40 | யானும் போந்து தீனுக் குழன்றும் பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும் பரியா தொழிந்து பல்லுயிர் செகுத்தும் வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும் பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும் |
45 | ஐவருங் கடுப்ப அவாயது கூட்டி |