பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை656

ஈண்டின கொண்டு மீண்டு வந்துழி
இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்

50

நின்னை அடைந்த அடியார் அடியார்க்(கு)

என்னையும் அடிமை யாகக் கொண்டே
இட்டபச் சிலைகொண் டொட்டிநன்(கு) அறிவித்
திச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்

55

தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.

22


உள்ளத்திற்குக் கேட்கும் ஓசை, நாவில்தித்தியாது மனத்தில் தித்திக்கும் தேறல், (தேன்) மூக்கிற்கு மணக்காமல் அறிவிற்கு மணக்கும் நாற்றம், அனைத்தும் தன்னினின்றும் முளைத்தலன்றித் தான் ஒன்றினின்றும் முளையாத முளை ஆகியவை அதிசய உருவகங்கள். அதிசய உருவகம் புறனடையாற் கொள்ளப் படும்.1 மூலம் - முதல்.“காலம் மூன்றையும் கடந்த கடவுள்” என்றதனால், கால வயப்பட்டுத் தோன்றி நின்று மறையும் கடவுளரும் இருத்தல் பெறப்பட்டது. “கடவுள்” என்பதும் விளியே. இகந்து - இகத்தலால். துளக்கற நிமிர்ந்த -அசை வில்லாது. ஓங்கி எரிகின்ற. ‘என்பு’, ‘எற்பு’ என்று ஆய பொழுது அஃது எதுகை நோக்கி, ‘எறுப்பு’ எனஓர் உகரமும், பகர ஒற்றும் விரியப் பெற்றது. ‘அங்கம்’ என்னும் வடசொல்லின் மொழி பெயர்ப்பாக, உடம்பு இங்கு “உறுப்பு” எனப்பட்டது. உயிரினுள்ளே எழுகின்ற ஓசையை ஒற்றுமை பற்றி உடம் பினின்றும் எழுவதாகக் கூறினார். உள்ளத்து ஓசை, மனத்தால் உணரப்படும் ஓசை. வைத்த - ‘சுவைக்கு’ என்று வைக்கப்பட்ட தெய்வத்தேறல் - தெய்வத் தன்மையுடைய தேன். துண்டம் - மூக்கு. ‘வழியிலன்றி’ என உருபு விரிக்க. நறிய நாற்றம் - நறுமணம் ஏனைய தன்மை - ஏனைய பொருள்களின் தன்மை. அவை மேற் கூறிய செல்வம் முதலியனபோல உள்ள பொருள்களின் தன்மை. எய்தாது - அடையாமல். அடையாவிடினும்எல்லாப் பொருள்களும் தானேயாகி நின்ற. தத்துவன்- மெய்ப் பொருளாய் உள்ளவன். இறைவன் சார்பு இல்லையாயின் யாதொரு பொருளும் நிலைக்கமாட்டாது. அஃது அகர உயிர் இன்றேல் அக்கரங்கள் இல்லையாமாறு போலும்2 அதனால் எப்பொருளும் நிலைபெறுதற் பொருட்டு அவற்றில் அவையே தானாகிக் கலந்து நிற்கின்றான்.


1. தண்டியலங்காரம் - உருவக அணி.

2. சிவஞான போதம் - சூ.2. அதி.1.