பக்கம் எண் :

657திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

அங்ஙனம் அவன் கலந்து நிற்பினும் யாதொரு பொருளாலும் தாக்கப்படாமையால், “ஏனைய தன்மையும் எய்தாது எவையும் தானே யாகி நின்ற தத்துவன்” என்றார்.“தானே” என்பது வேறு முடிபு கொள்ளு தலால் இடவழுவின்று. உம்மை இறந்தது தழுவிய எச்சம். தத்துவ - தத்துவனே.“ஏனைய தன்மையும்.... தத்துவ” என்பதைப் பின்வரும் “முளை” என்பதன் பின்னர்க் கூட்டி யுரைக்க. இனி, ‘அவ்வாறு ஓதுதலே பாடம்’ என்றலும் ஆம். தோற்றுவ எல்லாம் - தோன்றற் பாலன எல்லாவற்றையும் தோற்றி - தோற்றுவித்து.“முளை” என்பதற்கு ‘முளையாய் உள்ளவனே’ என்பதே பொருளாகலானும், அங்ஙனமாகும் பொழுது ‘முளை’ என்பது படர்க்கையேயாகவானும், ‘நின்னிடைத் தோற்றி’ என்னாது - ‘தன்னிடைத் தோற்றி’ என்றார். “தோற்றம் தோற்றா” என்பது “உண்ணலும் உண்ணேன்”1 என்பதுபோல நின்றது. சுடர் - விளங்குகின்ற. ‘வெண்மதி இருக்கவும் இருள் விரிதல் வியப்பு என்றபடி, இருவர்மாலும், அயனும் இது தொகைக்குறிப்பு. மாணிக்க - மாணிக்கனே! மாணிக்கம் போல்பவனே. ஈற்றடியை. “தனி நாயக”என்பதன்பின் கூட்டுக. உறு குறை - உன்பால் இரக்கின்றகுறை, மதி, முன்னிலை யசை. இருட் சிறை - இருளுக்கு இருப்பிடம். தொடர்ப்பட்டு - கட்டுப் பட்டு, கூடு, தாயது வயிறாகிய கூடு. கூட்டுச் சிறை உருவக உருவகம். ‘சிறைக்கண்புழுவினுடனே அழுந்தி வருந்தி’ என இயைக்க. ‘புழுவினுடனே’ என்றதனால், அங்குப் புழுக்கள் மலிந்திருத்தல் பெறப்பட்டது. பிணிப் பெயர், ‘வயிற்றுப் வலி, தலைவலி, முடக்குவாதம்’ முதலிய பெயர்கள். ‘அப்பெயர்களால் வந்துவருத்தும் தண்டனாளர்’ என்க. தண்டனாளர், தலைவன் விதித்த தண்டனையைச் செய்பவர்கள். “தண்டனாளர்”என்பதும் உருவகம். மிண்டி - நெருங்கி, அலைப்ப -துன்புறு விக்க. உதரம் - தாயது வயிறு ‘பதை பதைத்தல்’ என்னும் இரட்டைக் கிளவி செய்யுள் நோக்கிமிக்கு விரிந்தது. வாதம் - பிரசூத வாயு; குழந்தையைத்தாய் வயிற்றினின்றும் வெளி யேற்றும் காற்று. மத்திகை- குதிரையை அடித்து ஓட்டும் சவுக்கு. இதுவும் உருவகம்.இனி இவ்வாறு வருவன பிறவும் அவை. ‘அது மோத’ என்க.கிடத்தல் முதலியவற்றிற்குப் போதிய இடம் இல்லாதஇல்லம்; தாய் வயிறு. ‘இடம் குறைய வாய்ந்த இல்’என்க. துன்பத்திற்குக் காரணமாதல் பற்றிய பாவத்தையே கூறினாராயினும் புண்ணியமும் உடன் கொள்ளப்படும்.‘கருவிற்றானே பாவ புண்ணியங்களாகிய பிராரத்தங்கள் அமைக்கப்படுகின்றன’ என்றபடி. காவல் ஐவர் - திருவருளிற்செல்ல ஒட்டாமல் காத்து நிற்கின்ற ஐவர்; ஐம்புலன்கள். தளை - விலங்கு. பாசப்படுத்தல் - தடைப் படுத்தல். பையென- மெல்ல. ‘தாய் வயிற்றினின்றும் வெளியில் விட்டபின்’என்க. தீன் - தின்னப்படுவது. உண்ணப்படு வதனையும் இழிவு பற்றித்


1. கலித்தொகை - பாலை - 22.