வெண்பா 884. | சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப் புடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச் சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப(து) எங்கே இருக்க இருள். | | 23 |
கட்டளைக் கலித்துறை 885. | இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும் நெருக்கும் நெருக்கத்தும் நீளகத் துச்சென்று மீளவொட்டாத் |
தின்னப்படுவனவாகக் கூறினார். ‘தீதினுக்கு’என்பது பாடம் அன்று. ‘பெரியோரைப் பிழைத்தல்’என இரண்டாவது விரித்து, அதனை நான்காவதாகத் திரிக்க.பிழைத்தல் - தவறு இழைத்தல். பரியாது - இரங்காமல்.தோற்றம் - அழகு. புகழ்தல், விரும்புதலாகிய தன் காரணம்தோற்றி நின்றது. புல்லினம் - புல்லர் கூட்டம்.புல்லர் - அற்பர். புல்லுதல் - தழுவுதல் கடுத்தல் - சினத்தல் அஃது சினந்து ஏவுதலாகிய காரியத்தைக் குறித்தது. அவாயது- விரும்பியது. இது சாதியொருமை. ‘அவாவது’ என்பதுபாடம் அன்று. ஈண்டின - கிடைத்தவை, மீண்டு வருதல்உறைவிடத்திற்கு. உறைவிடம் ஒன்றால் இல்லாமல்பல ஊரும்,, பல நாடுமாக அலைதலால், இன்று வைத்த இடத்தில்நாளை வையாமல், இன்று இருந்த இடத்தில் நாளை இல்லாமல் ஊர் பெயர்ந்தும், நாடு பெயர்ந்தும் உழன்று, ‘இந்நாள்வரை’ என ஒரு சொல் வருவிக்க. வீடு நெறி - இத்துன்பம் நீங்கும் வழி. ஒட்டி - துணையாய் நின்று. நன்கு - நல்லது, ‘நன்கை அறிவித்து’ என்க. இச்சிறை - இவ்வுடம்பாகியசிறை. பிழைப்பித்து - தப்புவித்து, இனி இதுபோலும்சிறையில் புகாமல் காத்து அருள்செய்ய வேண்டும்’என்க. 884. குறிப்புரை: இப்பாட்டு, கைக்கிளைத் தலைவியது முதுக்குறைவுடைமையைத் தோழிமுன்னிலைப் புறமொழி யால் அவளைப் பழிப்பாள்போன்று புகழ்ந்து கூறியது. சமைந்து - அமைந்து. புடை -பாகம், “இவள்” என்பதை, “பொழிய” என்பதன்பின் கூட்டுக. “சங்கே, கலையே” என்னும் ஏகாரங்கள் எண்ணுப் பொருள. சங்கு - சங்க வளையல், கலை - உடை. “எங்கேஇருக்க” என, ‘இடம் இல்லாதவனைக் காதலிக்கின்றாள்’என இகழ்வாள்போலக் கூறினாளாயினும், ‘எவ்விடமும் அவன் இடமேயாதலை அறிந்தே காதலிக் கின்றாள்’ என உள்ளுறையாகப் புகழ்ந்தாள் என்க. 885. குறிப்புரை: மூன்றாம்அடி முதலாகத் தொடங்கி “மருதினுக்குள் இருக்கும்” என்பதை இறுதியில் வைத்து உரைக்க.
|