| திருக்கும் அறுத்தைவர் தீமையுந் தீர்த்துச்செவ் வேமனத்தை ஒருக்கும் ஒழுக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண்சுடரே. | | 24 |
அகவற்பா 886. | சுடர்விடு சூலம் ஏந்தினை என்றும் விடையுகந் தேறிய விமல என்றும் உண்ணா நஞ்சம் உண்டனை என்றும் கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும் | 5 | திரிபுரம் எரித்த சேவக என்றும் கரியுரி போர்த்த கடவுள் என்றும் உரகம் பூண்ட உரவோய் என்றும் சிரகரம் செந்தழல் ஏந்தினை என்றும் வலந்தரு காலனை வதைத்தனை என்றும் | 10 | சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் |
‘ஒட்டாது’ என்னும் எதிர்மறை வினையெச்சம் துவ்வீறு கெட்டு நின்றது. நெருக்கம் நெருக்கத்திலும் தளராது நீளச் சென்று கருவறையை அடைந்து காண்கின்றவர்கள் அன்பர்கள். ‘அவர்களை இன்புறுத்தும் வகையால் மீண்டுபோக ஒட்டாது ஒண்சுடர் வீற்றிருக்கும்’ என்க. திருக்கு- நன்மைக்கு மாறான குணம். செவ்வே - நேராக ஒருக்குதல்- ஒருமுகம் ஆக்கல், ஒருக்கம் - ஒருங்கிய நிலை. முளைக்கின்ற - வெளித் தோன்றுகின்ற. 886. குறிப்புரை: “எழுநிலைமாடத்து... திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் -அருள்சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்த” என்பதை முதற்கண் கொண்டு உரைக்க. ஒருவரைப் புகழுமிடத்து அவர் செய்தஅருஞ்செயல்களைக் கூறியப் புகழினும் அச்செயல்களைஅவர்க்கு அடையாக்கியும் வினைப் பெயராக்கி அவரைவிளித்தும் புகழினும் அமைதல் பற்றி இங்க மருதப்பிரானை அவ்வெல்லாவகையாலும் தாம் புகழ்தலைப் புலப்படுத்தினார். உண்ணா நஞ்சம் - ஒருவரும் உண்ணலாகாத நஞ்சம். சேவகம் - வீரம் உரகம் - பாம்பு உரவோய் - ஆற்றல் உடையவனே. சிரம் ஏந்திய கரம் வேறாயினும் சாதி பற்றி “சிரகரம் தழல் ஏந்தினை” என்றார்.வலம் - வெற்றி. தரு - தனக்குத் தானே தந்துகொள்கின்ற. வியந்த - தன்னைத் தான் வியந்து கொண்ட அரக்கன், இராவணன். உக்கிரம் - சினம். குறளன் - பூதமாகிய முயலகன் .‘நின்வயிற் சொல்லி’ என ஒரு சொல் வருவிக்க.சொல் அளவு - சொல் செல்லக் கூடிய அளவு. ‘சொல்லளவே’ எனப் பிரிநிலை ஏகாரம் விரிக்க. ‘நின் பெருமை அளப்பரும்
|