பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை690

926.துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும்
பணைத்தோள் அகலமுங் கண்டத்து நீலமும் அண்டத்துமின்
பிணைத்தா லனசடை யுந்திரு முக்கணும் பெண்ணொர்பக்கத்(து)
அணைத்தார் எழிற்கம்பர் எங்கள் பிரானார்க்(கு) அழகியவே.

35

927.அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம்
பழகறி விற்பெரி யோர்தமைப் பற்றலர் பற்றுமன்பின்
குழகறி வேற்பினுள் ஒன்றறி யாரறி யாமைத்தெய்வம்
கிழகெறி யப்பட் டுலந்தார் உலகிற் கிடந்தனரே.

36


இடையாது - தளர்ச்சியடை யாதபடி. அடைவான் - முன்வந்து காப்பான். அறிவார்க்கு - தன்னை மெய்ப்பொருளாக அறிபவர்க்கு. நறுந்துணை - நல்ல துணை; பிறவிக் கடலினின்றும் கைகொடுத்து முத்திக் கரையில் ஏற்றும் துணை.

926. குறிப்புரை: 'எங்கள் பிரானார்க்கு, துணைத் தாமரை அடியும்... முக்கணும் அழகிய' என்க. துணை - இணை. குறங்கு - துடை. பணை - பருத்த "தோள்" என்பதிலும் எண்ணும்மை விரிக்க. அகலம் - மார்பு. 'மின்னலை அண்டத்தில் (வானத்தில்) பிணைத்தாலன்ன சடை' என்க. திருச்சென்னி உயரத்தில் இருத்தலால் "அண்டத்தில் பிணைத்தாலன்ன" என்றார். அழகிய - மிக அழகாய் உள்ளன. அழகு - தனிமையிலும், தொகைமையிலும் தோன்றுவது.

927. குறிப்புரை: "அழகு அறிவினும் பெரிதாகிய" என்றது அழகினைப் புகழ்ந்த புகழுரை. இறைவர் அறிவிற் பெரியர் (முற்றறிவுடையவர்) என்பது நன்கறியப்பட்டதாகலின், 'அஃதேபோல் அழகிலும் பெரியவர் என்பது உணர்த்தியவாறு. "பெரிதாகிய" என்னும் பெயரெச்சம் "ஏகம்பர்" என்னும் இடப்பெயர் கொண்டது, என்னை? 'அவளது அழகு ஆடவர் கண்ணைக் கவர்கின்றது' என்றலேயன்றி, 'அவள் கண்ணதாகிய அழகு ஆடவர் கண்ணைக் கவர்கின்றது' என்றலும் வழக்காதலின். அத்தர் - தலைவர். கொற்றம் - வெற்றி. அஃது அதனால் உண்டாகிய "பொருள்சேர் புகழின்"1 மேல் நின்றது. 'கொற்றத்தின்கண்' என ஏழாவது விரிக்க. 'பழகு பெரியோர்' என இயைக்க. 'அன்பாகிய குழகினையுடைய அறிவு' என்க. இன், வேண்டாவழிச் சாரியை. குழகு - அழகு. 'அறிவுக்கு அழகு அன்பு' என்றபடி. ஏற்பு - ஏற்கும் வழிகள். 'இறைவனிடத்து அன்பை ஏற்கும் வழிகள் பல உளவாக அவற்றினுள் ஒன்றையும் அறியார்' என்றபடி. 'ஒன்றும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது. 'அறியாமையால்' என ஆல் உருபு விரிக்க. 'கீழ்'


1. திருக்குறள் - 6.