924. | உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி பத்துங்கை யான இருபதுஞ் சோர்தர வைத்திலயம் ஒத்துங்கை யாலவன் பாடக் கயிலையின் ஊடுகைவாள் எத்துங்கை யானென் றுகந்தளித் தார்கச்சி ஏகம்பரே. | | 33 |
925. | அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு வம்பரங் கொள்வதொர் வேழத் துரியவன் தன்னுருவாம் எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தானிடை யாதடைவான் நம்பரன் தன்னடி யாரறி வார்க்கு நற்றுணையே. | | 34 |
கொல்வா ரேனும், குணம்பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே குலமில ராயினுங் குலத்திற் கேற்பதோர் நலம் மிகக் கொடுப்பது நமச்சி வாயவே என்றாற்போல வரும் இடங்களிலும் உம்மை கொடுத்தே ஓதியருளுதல் காண்க. 924. குறிப்புரை: உத்துங்கம் - உயரம். உரி - தோல். வைத்து - அழுத்தி இலயம் - தாளம். 'ஒற்றும், எற்றும்' என்பன எதுகை நோக்கி, "ஒத்தும்,எத்தும்" எனத் திரிந்து நின்றன. கையால் பாடியது, கைவிரலால் விணையின் நரம்பைத் தெறித்து இசையை எழுப்பியது. கயிலையின் ஊடு அளித்தார்' என்க, "ஊடு" என்பது ஏழாவதன் பொருள்பட வந்தது "என்று" என்பதை, 'என்ன' எனத் திரித்து, 'என்று ஆகும்படி' என உரைக்க. எற்றுதல், இங்கு வெட்டி அழித்தலைக் குறித்தது. எனவே, "எற்றம்" என்பது 'அழிக்கும்' என்றதாய், அத்தகைய ஆற்றல் பெற்றமையை உணர்த்திற்று. 'யாவரையும் வெல்லும் வாட்படையை அளித்தருளினான்' என்றபடி. 'பிழை பற்றி ஒறுப்பினும், வழிபட்ட பின் அருள்புரிபவர் கச்சி ஏகம்பர்' என்றவாறு. 925. குறிப்புரை: "வம்பரம்... வேழத்து உரியவன், அம்பரம்... அணு தன் உருவாம் எம் பரன், கச்சியுள் ஏகம்பத்தான், தன் அடியார் இடையாது அடைவான், நம் பரன்' என இயைத்து, இவை அனைத்தையும் எழுவாயாக்கி, "அறிவார்க்கு நறுந் துணை" என முடிக்க. முதலில் அட்ட மூர்த்தங்கள் சொல்லப்பட்டன. அம்பரம் - வான். அணு - ஆன்மா வம்பர் தீயோர்; அசுரர், அம் கொள் வேழம் - (அவர்கள்) அழகிதாகக் கொண்ட யானை. 'கயாசுரன்' என்றபடி. உரி - தோல் "என் பரன்" என்பதில் "எம்" என்றது அடியார்களையும், "நம்பரன்" என்பதில் "நம்" என்றது அனைத்துயிர்களையுமாகும்.
|