| பொறைகொண்ட வாழைப் பொதும்புவை புன்சடை ஏகம்பனார் நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே. | | 78 |
| 970. | நன்னுத லார்கருங் கண்ணுஞ்செவ் வாயுமிவ் வாறெனப்போய் மன்னித ழார்திரு நீலமும் ஆம்பலும் பூப்பவள்ளை என்னவெ லாமொப்புக் காதென்று வீறிடும் ஏகம்பனார் பொன்னுத லார்விழி யார்கச்சி நாட்டுள்இப் பொய்கையுளே. | | 79 |
| 971. | உள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங் கிட்டநன்னீர் வள்வா ளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களையாட் கொள்வார் பிறவி கொடாதவே கம்பர் குளிர்குவளை கள்வார் தருகச்சி நாட்டெழில் ஏரிக் களப்பரப்பே. | | 80 |
இவ்வண்ணமாம்' என முடிக்க. கிடங்கு - அகழி. பழுக்காய் - பாக்கு மரக் காய். பொறை - சுமை. பொதும்பு - பொதும்பர்; சோலை, நறை - தேன். 970. குறிப்புரை: இப்பாட்டுக் கச்சி மாநகரின் பொய்கைச் சிறப்பைப் புகழ்ந்தது. "ஏகம்பனார்.... இப்பொய்கையுள்" என்பதை முதலிற் கொண்டு, 'நீலமும், ஆம்பலும் 'நன்னுதலால் கண்ணும், வாயும் இவ்வாறு' எனப் போய்ப் பூப்ப, வள்ளை என்று எல்லாம் காது ஒப்பு என்ன வீறிடும் என இயைத்து முடிக்க. நன்னுதலார் - மகளிர். 'இவ்வாறு ஆவன' என ஒரு சொல் வருவிக்க. போய் - வளர்ந்து, "மன் இதழ் ஆர்" என்பது நீலத்திற்கு அடை. 'வள்ளை யென்று' என்பதில் "என்று" பெயர்ப்பட வந்த எச்சம், 'மங்கலம் என்று ஓர் ஊர்' வீறிடும் - சிறந்து நிற்கும். "பொன்" என்பது உவம ஆகுபெயராய் நெருப்பைக் குறித்தது. 971. குறிப்புரை: "எங்களைஆட் கொள்வார்... ஏரி களப் பரப்பிலும், கிடங்கு இட்ட நன்னீரிலும் வாளைகளொடு கயல் மேய்கின்றன' என முடிக்க. உள் வார் - உள்ளே நீண்டு செல்கின்ற இடம். நெருங்குதல் - நிரம்புதல். கிடங்கு - அகழி, 'கிடங்கில் இட்ட' என உருபு விரிக்க. இடுதல் - நிரப்புதல். வன் - கூரிய. தலையும், வாலும், 'ஆட் கொள்வாரும், (எமக்குப்) பிறவியைக் கொடாதவரும் ஆகிய ஏகம்பரது கச்சி' என்க. கள் வார் - தேனை ஒழுக்குகின்ற 'ஏரியது களம்' என்க. களம் - இடம். ஏரி - பெரிய நீர்நிலை. 'இப்பெயர் இப்பொருளில் வருமிடத்தில் வேற்றுமைய் புணர்ச்சியிலும் வல்லெழுத்து மிகுதப் இல்லை' என்பர்.
|