பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை720

என்பதனோடு, ஒப்பிட்டுக் காண்க. இதனால், இத்தகைய ஏகம்பரது ஏத்து (துதி) என்பது, ஞானம் பொருளாய் நிற்க விளங்குதல் இல்லாத புன் சொற்கள் நிறைந்த பாத் தொடையாயினும் அதனை மெய்த் தொண்டர்கள் வேதப் பொருள் பொலிகின்ற பாத் தொடையாகவே மதித்து ஏற்றுக்கொள்வார்' என்பதாம். எனவே, 'எனது புன்சொற் பனுவலாகிய இதனையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்' என்பது குறிப்பெச்ச மாயிற்று. "வகையருள் ஏகம்பர்" என்றதனால், 'வகையருள்பவர் ஏகம்பர்' என்பது அனுவாதத்தால் பெறப்பட்டது. "போதம் பொருளால் பொலியாத" என்றது, 'போதம் பொருளாக, அதனாற் பொலியாத' எனப் பொருள் தந்தது.

திருஏகம்பமுடையார் திருவந்தாதி முற்றிற்று