| எவ்வகை அளவினில் கூடிநின்று | 30 | அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே. | | 1 |
992. குறிப்புரை: அகவல் ஆகிய ஒருவகைப்பாவே அந்தாதியாய் வரப் பத்துப் பாடல்களால் செய்யப்படுவது 'ஒருபா ஒருபது' என்னும் பிரபந்தமாகும். குறிப்புரை: 'பொரு கடலாகிய மேகலையை இயல்பினின் உடுத்த இருநில மடந்தை முகம் எனப் பொலிந்த ஒற்றி மாநகர்' என இயைக்க. "உருவின் பெற்றி ஒன்றாகப் பெற்றோர் யாரே" என்பதனை இறுதியிற் கொள்க. துன்னும் - நெருங்கிய. 'நின் சடை மின்னின் பிறக்கம்; நின் சென்னியின் வடிவு அண்டம். நின் நுதல் நேர் நாட்டம் மூவகைச் சுடரும்; ஆரம் தாராகணம்; நின் ஆகம் விசும்பே; தோள் எண்டிசை; உடை கடல்; அல்குல் அவனி மண்டலம்; தாள் இணை வழக்குப் பாந்தள்; உயிர்ப்பு மாருதமே; நின் வாய்மொழி ஓசை முழுதும்; நின் உணர்வு ஞானத் தொகுதியே; நின் தெழிவின் விளைவுகள் உலகு நிற்றலும் சுருங்கலும், விரிதலுமே, நின் இயல்பு அவற்றின் முயற்சியே. அதுவும் இமைத்தலும் விழித்தலுமே; என்று இவை முதலாம் இயல்புடை வடிவினோடு உரு இருவகை ஆகி, எண்வகை மூர்த்தியோடு முத்திறக் குணம் முதலிய ஆகி, எண் இறந்து ஓங்கி, எவ்வகை அளவினும் கூடி நின்று அவ்வகைப் பொருளும் நீ ஆகிய இடத்து (நின்) உருவம் ஒன்றாகப் பெற்றார் யாரே' என இயைத்து முடிக்க. 'சடை ஒரு வகையது, சென்னி ஒரு வகையது, கண்கள் ஒரு வகையன, மற்றும் பலவும் பலப்பல வகையன முழுமையாகப் பார்க்கும் பொழுதும் ஒரு கூறு ஆண், ஒரு கூறு பெண் என்றால் உனது திருமேனியை உலகில் உள்ள எந்த இனத்து உடம்பிலும் வைத்து ஒருதலையாக உணர்ந்தோர் ஒருவரும் இலர்' என்பதாம். இவற்றிடையே, 'இயல்புகளும் உலகில் உள்ள ஒத்த உயிர் இனத்தின் இயல்பாகவும் இல்லை' என்பது கூறப்பட்டது. இதனால், 'இறைவன் சேதனம், அசேதனம் என்னும் இரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றும் அல்லன்' என்பது அவனது தடத்த இயல்பானே உணரப்படுதல் கூறப்பட்டது. பிறக்கம் - விளக்கம். பாலகன் - அக்கினி. நுதல் நேர் - முகத்தில் பொருந்திய. நுதல், ஆகுபெயர். தண் ஒளி - வெள் ஒளி. வெள் ஒளி ஆரம், தலை மாலை. "விண்ணவர் முதலா" என்பதில் "முதலா" என்பது முனிவர், பிரமன், விட்டுணு ஆகியோரைக் குறித்தது. வேறு, மக்கள் உலகின் வேறு. கோலம் - அழகு. ஆகம் - உடம்பு. இருங்கடல் - கரிய கடல். அல்குல் - பிருட்டம். இதுபோலும் உயர்ந்தோர் செய்யுட்கள் பலவற்றிலும் 'அல்குல்' என்பது ஆடவர்க்கும் உரிய உறுப்பாதல் வெளிப்படையாகே சொல்லப்படவும் அதற்கு இக்காலத்துச் சிலர் இடக்கர்ப் பொருள்
|