993. | இடத்துறை மாதரோ(டு) ஈருடம் பென்றும் நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும் புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும் பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும் | 5 | அருவமும் உருவமும் ஆனாய் என்றும் திருவமர் மாலொடு திசைமுகன் என்றும் உளனே என்றும் இலனே என்றும் தளரான் என்றும் தளர்வோன் என்றும் ஆதி என்றும் அசோகினன் என்றும் | 10 | போதியிற் பொலிந்த புராணன் என்றும் |
கொண்டு பழித்துரை கூறுதல் இரங்கற்குரியது. அவனி மண்டலம் - பூ மண்டலம்; நிலத்தது அகலம். பாந்தள் - ஆதிசேடன். வழக்கு - இயக்கம். மாருதம் - காற்று. உயிர்ப்பு - மூச்சு. இறைவனது உணர்வு உள்நின்று உணர்த்தவே உயிர்களின் உணர்வு எதனையும் உணர்தல் பற்றி 'அவனது உணர்வு உயிர்களின் உணர்வுத் தொகுதியே' என்றார். 'முயற்சியே, முயற்சியும்' என 'முயற்சி' என்பதை இரட்டித்துக் கொள்க. "அதன்" என்பதைத் தனித் தனிக் கூட்டுக. அமைத்தல் - ஆக்குதல். தொழில் - தொழிலின் விளைவு; ஆகுபெயர். "இமைத்தல்" என்பது கண்ணை மூடுதலைக் குறித்தது. 'கண்ணை மூடிக் கொள்ளுதல்' என்பது ஒன்றையும் நினையாமையையும், 'விழித்தல்' என்பது நினைவு எழுதலையும் இலக்கணை வழக்காற் குறித்தன. 'இறைவன் நினைவை ஒடுக்கலால் உலகம் ஒடுங்குதலும், நினைவு கொள்ளுதலால் உலகம் தோன்றுதலும் உளவாகும்' என்றபடி. இமைத்தல் விழித்தல்களை அமைத்தல் அழித்தல்களோடு எதிர்நிரல் நிறையாக இயைக்க. "என்று", எண்ணிடைச் சொல். துப்பு உரு - தூயதாகிய திருமேனி, எண்வகை மூர்த்தி - அட்ட மூர்த்தம். "எண் இறந்த" என்பதை 'எண் இறப்ப' எனத் திரிக்க. எவ்வகை அளவு - சிறுமை பெருமைகள். கூடி நிற்றல் - மிகுந்து நிற்றல். அவையாவன சிறியவற்றிற்கெல்லாம் சிறியர் ஆதலும், பெரியவற்றிற்கெல்லாம் பெரியன் ஆதலும் "இடத்து" என்பது வினையெச்ச விகுதி. 'நீ இவ்வாறானவிடத்து, நின் உருவின் பெற்றி ஒன்றாகப் பெற்றார் யார்' என மேலே கூட்டி முடிக்க. 993. குறிப்புரை: 'ஒற்றி மாநகர் உடையோய்! (நின்) உரு, பன்னிய நூலின் பன்மையுள் தாம் அறி அளவையில் மயங்கி என்றும், என்றும்... பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி அவ்வவர்க்கு அவ்வையாகிப் பற்றிய அடையின் பளிங்கு போலும்' என இயைத்து முடிக்க. முதல் நான்கு அடிகளில் கூறப்பட்டன சைவ புராணங்களையே பற்றி மாகேசுர மூர்த்தங்களுள் ஒவ்வொன்றையே
|