| இன்னவை முதலாத் தாமறி அளவையின் மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப் பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி அணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகிப் | 15 | பற்றிய அடையின் பளிங்கு போலும் ஒற்றி மாநகர் உடையோய் உருவே. | | 2 |
சிவனது உண்மையியல்பாகக் கூறிப் பிணங்கும் பௌராணிகரும், அகப்புறச் சமயிகளும், 'அருவம் ஆனாய்' என்றும், 'உருவம் ஆனாய்' என்றும் எனக் கொண்டு கூட்டிக் கொள்க. 'இறைவன் உருவம் உடையனாயின் உயிர் வருக்கத்தவனாவன் ஆதலின் இறைவனுக்கு எவ்வாற்றானும் உருவமில்லை; அவன் அருவனே என்பார் மேற்கூறிய இருமதத்தவருள் ஒவ்வொரு சாரார். இனி, 'இறைவன் உருவன் ஆகாவிடில் உயிர்களுக்குக் காட்சி வழங்குமாறில்லை. அதனால் இறைவனுக்கு உருவமும், அவனுக்கென இடமும் உள்ளன'என்பாரும் மேற்கூறிய இரு மதத்தவருள் ஓரொரு சாரார். 'திருமாலே இறைவன்' என்பார் பாஞ்சராத்திரிகள். 'திசைமுகனே இறைவன்' என்பார் இரணிய கருப்ப மதத்தினர். 'இறைவன் உளன்; ஆயினும் அவனை இன்னன் - எனக்கூற இயலாது' என்பார் மாயாவாதிகள். 'இறைவன் இல்லை' என்பார் உலகயாதரும், மீமாஞ்சரளும், நிரீச்சுர சாங்கியரும், தளர்தல் நெகிழ்தல், அருளுதல், தளராமை இரங்காது ஒறுத்தலே செய்தல் தளர்தல் ஒறுத்தல் இன்றி அருளலே செய்தல். எட்டாம் அடியிற் கூறிய இரண்டும் சமணர் கூற்றுக்கள். ஆதி - ஆதி முத்தன். அசோகினன் - அசோக மரத்தின்கீழ் இருப்பவன். போதி - அரச மரம். புராணன் - பழையோன். 'போதி நிழலில் இருப்போன் இறைவன்' என்பார் புத்த மதத்தினர். நூல் - வேறுபட்ட சமய நூல்கள். இவைகளையே உணர்ந்து வேத சிவாகமங்களை உணராதாரும், உணரினும் தெளியாதாரும் ஆசிரியராய் மெய்யுணர்வு கொளுத்தப் புகுதலால் இவை போலும் பிணக்குகள் உளவாகின்றன. அதனையே திருமூல நாயனார், குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே1 என்று அருளிச் செய்தார். "செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யேபோல்"2 அவரவரது அறிவு செயல்களுக்குத் தக்க இறைவன் பயன் அளிப்பவனேயல்லது, எவரது செயலையும் வீணாக்குபவன் அல்லன் ஆதலின் அவரவர் கருதுமாறே நின்று அவரவர்க்குப் பயன்
1. திருமந்திரம் - 1680. 2. சிவஞான போதம் - சூ.2. அதி.2
|