994. | உருவாம் உலகுக் கொருவன் ஆகிய பெரியோர் வடிவிற் பிறிதிங் கின்மையின் எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின் அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின் | 5 | முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித் தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும் வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும் நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும் ஒங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும் | 10 | பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும் திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும் குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும் என்றிவை முதலா ஆள்வினை எல்லாம் நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதலின் | 15 | உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர் நிகழ்ச்சியின் நிகழ்த்தின் அல்லது புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே. | | 3 |
தருவன் என்பது பற்றி "அவ்வவர்க்கு அவ்வவை யாகி" என்றார். அணங்கிய - துன்புற்ற அடை - அடையப்பட்ட பொருள். பளிங்கு தன்னால் அடையப்பட்ட பொருளின் தன்மையாய் நிற்றல்போல, 'இறைவன் தான் தனது அருள் காரணமாகத் துணையாய் அடையப்பட்டாரது கருத்திற்கேற்ற இயல்பினை உடையனாவன்' என்பதாம். பொன்மை நீலாதி வன்னம் | பொருந்திடப் பளிங்கு அவற்றின் | தன்மையாய் நிற்கு மாபோல் |
என்றார் சிவஞான சித்தியிலும்1 இடத்து - இடப்பாகத்தில் உரு, இங்கு 'இயல்பு' என்னும் பொருட்டு. 994. குறிப்புரை: சிவபெருமான் செய்த வீரச் செயல்களாகப் புராணங்களில் சொல்லப்படுவன பல. அவை திரிபுரம் எரித்தது, தக்கன் வேள்வியில் எச்சனது தலையைத் தடிந்தது, இந்திரன்
1. சூ.2.68.
|