பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை726

995.பொருளுணர்ந் தோங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினுஞ் செய்தொழில் வகையினும்
5வெவ்வே றாகி வினையொடும் பிரியாது

ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும்
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்

10விரவியும் வேறாய் நின்றனை விளக்கம்

ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.

4


தோளை ஒரு காலத்தில் முறித்தது. பிரமன் தலைகளுள் ஒன்றைக் கிள்ளியது, காமனை எரித்தது, இராவணனை மலைக்கீழ் அகப்படுத்தி நெரித்தது, யமனை உதைத்தது முதலியன. சிவபெருமானது வியாபகத்துள் அடங்காதது எப்பொருளும் இல்லை. அஃதே எல்லாப் பொருளையும் அவன் தனக்கு வடிவாக உடைமையின் எப் பொருளும் அவனது உறுப்பே. ஆகவே, பொது மக்களேயன்றி, 'எப் பொருளும் இறைவன் வடிவே' என உணர்ந்தோரும் மேற்கூறிய செயல்களைச் சிறப்பாக எடுத்துக் கூறுவார்களாயின் அது நீ ஓரோர் காலத்து நிகழ்த்திய நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுவதாகுமேயன்றி, உன்னைப் புகழ்ந்ததாகுமோ? (ஆகாது, ஏனெனில், ஒருவன் தனது உறுப்புக்களைத் தான் பலவகையில் இயக்குதல் அவனுக்குப் புகழாகுமோ? ஆகாமை போல என்பதாம்.)

உருவாம் உலகு - பருப்பொருளாய் உள்ள உலகு. ஒருவன் - ஒப்பற்ற தலைவன். "வடிவு" என்றது வியாபகத்தை. சூழ்தல் - எண்ணுதல். வேள்வி மூர்த்தி - எச்சன்; யாக தேவன். விசும்பு ஆளி - இந்திரன். மறையோன் - பிரமன். ஆள்வினை - வீரம். "கண்டவர்" என்பதன் பின் 'ஆயின்' என ஒரு சொல் வருவிக்க. படுப்பரோ - படுத்து உணர்வரோ. "உலவாத் தொல் புகழ் ஒற்றியூர்" என்பதை முதலிற் கொள்க.

995. குறிப்புரை: "ஓவாத் தொல் புகழ்.... முதல்வ" என்பதை முதலிற்கொள்க. பொருள் - வேதப் பொருள். பூ மகன் - மாயோனது உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமன். முதல் தொழிலாகிய படைத்தலைச் செய்தல் பற்றிப் பிரமனையே முதல்வனாகக்