996. | மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை துயக்க நின்திறம் அறியாச் சூழலும் |
கூறினார். எனினும் அவனுக்கு மேலும் உயிர் இனத்தவர் உளர் என்க. இருள் - அறியாமை. துணை - அவ் இருளைச் சிறிதே போக்கி உதவுவது. எனவே, அத்தகைய யாக்கையின்றி உயிர்கள் இயங்கா என்பார், "இருள்துணை யாக்கையின் இயங்கும் மன்னுயிர்" - என்றார். 'மன்னுயிர் வினையொடும் பிரியாது' என இயையும். வினை காரணமாக அவையடையும் மாற்றங்கள் உருவொடு உணர்வும், உயர்வொடு தாழ்வும், திருவொடு தெளிவுமாம். உரு - உடம்பு. இது பருப்பொருள். உடம்பினின்றும் தோன்றும் உணர்வுகள் நுட்பப்பொருள். பணி - தாழ்வு. திரு செல்வம். திறல் - வெற்றி. இன் உருபுகள் ஏதுப் பொருளவாய், "வெவ்வேறாகி" என்பதனோடு முடிந்தன. "பிரியது" என்னும் எதிர்மறை வினையெச்சம், 'நின்று' என்னும் பொருட்டாய், "வினையொடும்" என்பதற்கு முடிபாயிற்று. அவ் எச்சம், "ஒழுக்கம்" என்னும் தொழிற் பெயர் கொண்டது. உண்மை சிறப்பு. ஒவ்வா - ஒன்றுக்கொன்று மாறுபட்ட "பன்மையுள்" என்பதில் உள்ள "உள்" என்பதை இன்னாகத் திரிக்க. 'நின்னிடையாகியும்' என உம்மை கொடுத்து ஓதுதல் பாடம் அன்று. பெயர்தல் - மறைதல். "பெருகி" முதலிய நான்கு வினையெச்சங்களும் "விரவி" என்பதனோடே முடிந்தன. "விரவியும்" என்னும் உம்மை சிறப்பு. 'விளக்கம்' வேறாய் நின்றனை' என மாற்றிக் கொள்க. "நின்னிடையதாகிய இம்மயக்கினை நின் அருள் பெற்றவர் அறியனல்லது, மற்றவர் அறிவரோ" என முடிக்க. மயக்காவது, உண்மை மாத்திரையால் பொதுப்படத் தோன்றி, 'இன்னது' எனச் சிறப்புற விளங்காமை. மயக்கு உடையதனை "மயக்கு" என்றது உபசாரம். 'ஒற்றியூர்ப் பெருமானே பலவாகிய உயிர்கள் தம் வினை காரணமாக அடையும் அளவிறந்த மாற்றங்கள் பலவற்றிற்கும் நீயே இடமாய் நின்றும் அவற்றுள் ஒரு மாற்றத்தினையும் நீ சிறிதும் எய்தாது, மாற்றம் இல் செம் பொருளாயே நிற்கின்றாய்; இஃது எவ்வாறு' என்னும் அரும் பொருளை உனது அருளைப் பெற்றோர் உணர்வதன்றி, மற்றவர் உணர வல்லுநரல்லர்' என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். இஃது எல்லாப் பொருட்கும் இடமாய் நிற்பது ஆகாயமேயாயினும், அப் பொருள்களின் மாற்றங்களுள் ஒன்றையேனும் அவ் ஆகாயம் எய்தாது போல்வது. இதனையே, 'கலப்பினால் எல்லாமாய் நிற்கின்ற இறைவன் பொருள் தன்மையால் அவற்றின் வேறாகியும் நிற்கின்றான்' எனச் சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. 996. குறிப்புரை: 'ஒற்றி யூர! செஞ்சடை மாதவம் துன்னிய தூ மதியோய்! 'சொற்கள் யாவும் நீ' என்பது உண்மையாய் இருக்கவும் அவை உனது இயல்பை அறிய இயலாத நிலமையை நீ உயிர்களின்
|