பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை806

நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியவெறி பத்தனுக் கீந்ததொர் வண்புகழே.

50

நரசிங்க முனையரைய நாயனார்

1143.புகழும் படியெம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலமெங்கும்
நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன் னிட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே.

51

அதிபத்த நாயனார்

1144.திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்
றுறவமர் மாகடற் கேவிடு வோனொரு நாட்கனக

1142. குறிப்புரை: புலம் மன்னிய மன் - ஞானம் நிலைபெறப் பெற்ற தலைவன். கோகன நாதன் குலமுதலோன் - சூரிய குலத்தின் (சோழர் மரபின்) மூதாதை. இவையிரண்டும் "புகழ்ச் சோழன்" எனப்பட்ட அவரையே குறித்தன. ஐ - அழகு. 'சிங்கள நாட்டைப் பொடிபடுத்த கோகன நாதன் குலம்' என்க. கரிகாலன் முதலாக அவ்வப்பொழுது வந்த சோழர்கள் சிங்கள நாட்டின்மேற் படைகளை ஏவிப் பலமுறை வென்றார்கள் ஆதலின் அவ்வெற்றியை ஒருவனுக்கே உரித்தாக்கிக் கூறாது, குலம் முழுவதற்குமாக ஆக்கிக் கூறினார். குலம் மன்னிய புகழ்க் குலம் - தொன்றுதொட்டு வழி வழியாக நிலைபெற்று வரும் புகழையுடைய குலம்.

1143. குறிப்புரை: எம் பரமே - எம் அளவினதோ. ஏகாரம். வினா. இத்தொடரை இறுதியிற் கூட்டியுரைக்க. தவர் - சிவனடியார்கள். அவர்கட்கு இந்நாயனார் திருவாதிரைத் திருநாளன்று திருவமுது படைத்து, ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு நூறு பொன் நன்கொடையாக அளித்து வந்தார். மடவார் புனை கோலம் - மகளிர் தன்னை விரும்பும்படி புனைந்து கொண்ட தூர்த்த வேடம். 'மடவார்க்கு' என நான்காம் உருபு விரிக்க. இவ்வேடத்திற்கு இடையே அவன் தானும் பொன் பெற வேண்டி திருநீறு கண்டிகைகளையும் அணிந்துகொண்டு அடியார்களோடு சேர்ந்து வந்தான். அவனைப் பிறர் எல்லாரும் இகழ்ந்த போதிலும் இந் நாயனார் அவனுக்கு இருநூறு பொன்னை நன்கொடையாக அளித்தார். அதற்குக் காரணம், 'அவனையிகழ்ந்தால், திருநீறு உருத்திராக் கங்களை நாம் போற்றாதவர் ஆவோம்' எனக் கருதியதேயாம்.

1144. குறிப்புரை: கடலில் வலையை வீசி மீன் பிடிக்கும் பொழுது மீன் ஒன்றே ஒன்று தனியாக வலையில் அகப்பட்டுக்