பொய்யடிமை இல்லாத புலவர் 1141. | தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதில்கபிலர் பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர் அருள்நமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே. | | 49 |
புகழ்ச்சோழ நாயனார் 1142. | புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன் |
எச்சம் எண்ணின்கண் வந்தது. "திரியும்" என்னும் பெயரெச்சம், "பழமொழி" என்னும் பிற பெயர் கொண்டது. 'குற்றேவலுள் ஒன்றிரண்டைச் செய்த கூனனும், குருடனும் நீக்கலாகாத கூனும், குருடும் நீங்கி நலம் பெற்றார்கள் என்றால் அவ் ஆரூரரையே தலைவராகக் கொண்டு அவர்க்கு முழுதும் ஆட்பட்ட நம்பால் கூற்றுவன் வாராது நீங்குதல் அரிதன்று' என்பதாம். 1141. குறிப்புரை: பொய்ம்மை இலாத் தமிழ்ச்சங்கம் - உலகியலை நோக்காத தமிழ்ச் சங்கம். இது சைவத் தமிழ் சங்கம். 'தலை, இடை, கடை' என்னும் மூன்று தமிழ்ச் சங்கங்களும் பெரும்பான்மையும் அறம், பொருள், இன்பங்களையே நெறிப்படுத்தினவாக, இச்சங்கம் வீடு ஒன்றனையே நோக்கி அமைந்தமையால், "பொய்ம்மையிலாத் தமிழ்ச் சங்கம்" என்றார். இது திருவாதவூரடிகளை அமைச்சராகக் கொண்டு விளங்கிய, "பெரிய அன்பின் வரகுண தேவன்"1 எனப்பட்ட பழைய வரகுண பாண்டியனுக்குப் பின் வந்த பாண்டியன் காலம் முதலாகத் தொடங்கி நடைபெற்றது. எனவே, 'இதில் இருந்த கபிலர், பரணர், நக்கீரர் முதலிய புலவர்கள் பெயரால் ஒன்றுபட்டுக் காணப்பட்ட போதிலும் பழைய உலகியற் சங்கத்தில் இருந்த கபிலர், பரணர், நக்கீரர் முதலியோரின் வேறுபட்டோர்' என்பது உணரற் பாலது. இவர்களும் முன்னோரைப் போற்றும் வகையில் அவர்களது பெயரைப் பூண்டு விளங்கினர். நாற்பத் தொன்பது புலவோர்; மற்றும் பல்புலவோர்' எனத் தனித்தனி இயைக்க. 'நாற்பத்தொன்பதின்மர் சிறப்படையோர் என்க. 'நாற்பத் தொன்பதின்மர்' என்பதும் ஒரு பழமை பற்றிக் குறிப்பிடப் பட்ட எண்ணாகும். "அரன் சேவடிக்கே பாடும் புலவர்கள்" என்றதனால், 'இவர்கள் மக்களைப் பாடாத நெறிமை யுடையவராதல் விளங்கும். இவர்கள் பாடிய பாடல்கள் 11-ஆம் திருமுறையாகக் கோக்கப்பட்டன.
1. இத்திருமுறை - திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 28.
|